தோனிக்காக உருக்கமான வேண்டுகோளை பி.சி.சி.ஐ யிடம் முன்வைத்த தினேஷ் கார்த்திக் – விவரம் இதோ

karthik1
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் முன்னணி வீரருமான தோனி நேற்று இரவு தனது ஓய்வை திடீரென அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்புக்குப் பிறகு ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர். உலகெங்கிலும் இருந்து தேனிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மேலும் அவரது இந்த அறிவிப்பினை யாரும் கொஞ்சம் கூட எதிர்பாக்காமல் வழக்கம்போல் அதிரடியாக அறிவித்துள்ளார்.

Dhoni

- Advertisement -

இந்நிலையில் தோனியுடன் விளையாடிய சக வீரரான தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் டோனியின் ஓய்வு குறித்தும் அவருக்கு செய்ய வேண்டிய மரியாதை குறித்தும் தனது விருப்பத்தை பிசிசிஐக்கு தெரிவித்துள்ளார். அதாவது டோனி இந்திய கிரிக்கெட்டிற்கு பல சிறப்பான வெற்றிகளை தேடித் தந்துள்ளார்.

அவரது சேவை இந்திய அணிக்கு அளப்பரியது. இத்தனை ஆண்டுகள் இந்திய அணியை கட்டிக் காப்பாற்றிய அவருடைய ஜெர்சி நம்பரான ( 7 ஆம் எண்ணை) இனி இந்திய வீரர்கள் வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது. என்றும் அந்த எண்ணை இந்திய கிரிக்கெட்டில் ரிட்டயர் செய்ய வேண்டும் என்றும் கார்த்திக் கேட்டுக்கொண்டுள்ளார் .

7

ஏற்கனவே இந்திய கிரிக்கெட்டுக்காக மகத்தான சாதனை புரிந்த சச்சின் டெண்டுல்கரின் பத்தாம் நம்பர் என்னை வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது என்று ரிட்டையர் செய்யப்பட்டது. அதன்பிறகு தற்போது தோனி எண்ணான ஏழையும் ரிட்டயர் செய்து அவருக்கு உரிய மரியாதையை தரவேண்டும் என்று கார்த்திக் பிபிசியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Karthik

இதுகுறித்து பிசிசிஐ என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது விரைவில் தெரியும். இருப்பினும் தோனிக்கு உரிய மரியாதை செலுத்தும் விதமாக அந்த எண்னை வேறு யாரும் பயன்படுத்தாமல் அதை விட்டுவிட்டு வைக்கலாம் என்பது ரசிகர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement