- Advertisement -

தன் ரசிகனுக்காக தினேஷ் கார்த்திக் செய்த செயல் ! நெகுழ்ச்சியான தருணம் ! வீடியோ உள்ளே

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8மணிக்கு நடைபெற்ற போடியில் கொல்கத்தா அணி பெங்களூரு அணியுடன் மோதியது.இதில் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருது பெற்ற தினேஷ் கார்த்திக் பரிசுத்தொகையை அப்படியே மனநலம் குன்றிய ஒரு குழந்தையின் மருத்துவ உதவிக்காக வழங்கி அனைவரையும் சபாஷ் போட வைத்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த போட்டியில் விராட்கோலி தலைமையிலான பெங்களூரு அணியை தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி சந்தித்தது.இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் சிறப்பான கேப்டன்ஷிப் மற்றும் சிறப்பான ஆட்டத்தால் பெங்களூரு அணி நிர்ணயித்த வெற்றி இலக்கான 177 ரன்களை இலகுவாக கடந்து நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

முன்னதாக கொல்கத்தா அணியின் சுனில் நரேன் அரைசதம் அடித்து அணிக்கு வலுவான தொடக்கத்தை தந்தார்.பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணியின் கேப்டனான தினேஷ் கார்த்திக் 29 பந்துகளில் நான்கு பவுண்டரிகளுடன் 35 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் அணி வெற்றிபெற உதவினார்.இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது தினேஷ் கார்த்திக்கிற்கு வழங்கப்பட்டது.தினேஷ் கார்த்திகிற்கு வழங்கப்பட்ட ஆட்டநாயகன் பரிசுத்தொகையை அப்படியே கொல்கத்தா அணி ரசிகரான மன நலம் குன்றிய ஒருவரின் மருத்துவ உதவிக்காக வழங்கப்பட்டது.

மேலும் கொல்கத்தா அணி சார்பில் இந்த ஐபிஎல் தொடரில் ஆட்டநாயகன் விருது மற்றும் பரிசுத்தொகை பணம் அனைத்தையும் இதேப்போல தங்களுடைய ரசிகர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.கொல்கத்தா அணியின் இந்த மனிதாபிமானமிக்க முடிவு அனைத்து அணியின் ரசிகர்களையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.அனைவரமே தற்போது இவர்களது செயலை பாராட்டி வாழ்த்தி வருகின்றனர்.

- Advertisement -