எல்லாம் முறைப்படி நடக்க 4 வாரங்கள் ஆகும். அதுவரைக்கும் ப்ராக்டீஸ் தான் – தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்

Karthik
- Advertisement -

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் எந்த ஒரு கிரிக்கெட் போட்டிகளும் நடைபெற வில்லை. மேலும் சர்வதேச போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் நடைபெற இருந்த மிக முக்கியமான தொடரான ஐபிஎல் தொடரும் கொரோனா பாதிப்பின் காரணமாக இரு முறை தள்ளி வைக்கப்பட்டு தற்போது காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

karthik

- Advertisement -

இதனால் பல்வேறு நாட்டு வீரர்களும் தங்கள் வீட்டில் முடங்கி உள்ளனர். தங்களது ஓய்வு நேரத்தினை சமூகவலைத்தளத்தின் மூலம் கழித்து வருகின்றனர். மேலும் தற்போது இந்த கொரோனா தாக்கம் குறையாததால் 5வது முறையாக லாக் டவுடனில் மக்கள் உள்ளனர். மேலும் சில கட்டுப்பாடுகளுடன் விளையாட்டு வீரர்கள் பயிற்சியை தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த மாதம் கிரிக்கெட் போட்டிகளை துவக்க அனைத்து நிர்வாகிகளும் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டிற்கு தயாராக எத்தனை நாட்கள் தேவைப்படும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னணி வீரர் தினேஷ் கார்த்திக் தனது கருத்தினை அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த மாற்றம் மிகவும் கடினமாக ஒன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். சர்வதேச போட்டிகளுக்கு மீண்டும் இந்திய அணி வீரர்கள் திரும்ப வேண்டும் என்றால் நிச்சயம் நான்கு வார பயிற்சி தேவைப்படும் என்று நினைக்கிறேன். சென்னையில் தற்போது கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டுள்ளது. அதனால் அனுமதி பெற்று பயிற்சிக்கு செல்ல முடியும்.

karthik

இதனால் நான் கொஞ்சம் கொஞ்சமாக என்னை தயார் செய்து வருகிறேன். உடல் முழுவதுமாக ஜாம்பி போல செயல்படுகிறது. வீட்டினுள்ளேயே உட்கார்ந்து ஒன்றுமே செய்யமுடியாமல் இப்படி உடம்பு செயல்படுகிறது. அதனால் இந்த நிலையை முதலில் மாற்ற வேண்டும் சீக்கிரம் பயிற்சியை தொடங்கி கிரிக்கெட் போட்டிகளுக்கு தயாராக வேண்டும் என்றும் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement