- Advertisement -

இப்படி விளையாடுனா ரோஹித்துக்கு அது செட்டாகாது.. அவரோட டெக்னிக் தப்பு – தினேஷ் கார்த்திக் விமர்சனம்

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டி20 வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தற்போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை வழி நடத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே தனது பேட்டிங் ஸ்டைலை முற்றிலுமாக மாற்றிக்கொண்ட ரோகித் சர்மா முன்பை காட்டிலும் அதிரடியாக விளையாடுகிறார். அதிலும் குறிப்பாக போட்டியின் ஆரம்பத்திலேயே தனது அதிரடியான ரன் குவிப்பின் மூலம் இந்திய அணி முன்னுக்கு கொண்டுவர நினைக்கிறார்.

ரோஹித் சர்மாவின் பேட்டிங் ஸ்டைல் முற்றிலும் மாறியுள்ளது :

அவரது இந்த பேட்டிங் ஸ்டைல் சில போட்டிகளில் இந்திய அணிக்கு சாதகமாக இருந்தாலும் பல போட்டிகளில் அவர் முன்கூட்டியே ஆட்டம் இழப்பதால் இந்திய அணி இக்கட்டான நிலையை சந்திக்கிறது.

- Advertisement -

குறிப்பாக நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்ததற்கு அனுபவ வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரது பேட்டிங் ஃபார்ம் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மொத்தம் ஆறு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து இருவரும் தலா ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளனர்.

இதன் காரணமாக தற்போது அவர்கள் இருவரது பேட்டிங் ஃபார்ம் குறித்த விமர்சனம் அனைவரிடத்திலும் இருந்து வருகிறது. இந்நிலையில் ரோகித் சர்மாவின் தடுமாற்றம் குறித்து பேசிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கூறுகையில் : ரோகித் சர்மா தொடக்க வீரராக தனது பொறுப்பை ஏற்றுக் கொண்ட காலத்தில் இருந்து மிகச் சிறப்பாக விளையாடி வந்தார். ஆனால் தற்போது அவருடைய பேட்டிங் டெக்னிக் மீது அவர் நம்பிக்கை வைக்க வேண்டும்.

- Advertisement -

ஆனால் ரோகித் சர்மா அதை செய்யாமல் அதிரடியாக விளையாட வேண்டும் என்பது மட்டும்தான் ஆப்ஷன் என்பது போன்று விளையாடிக் கொண்டிருக்கிறார். அவரது பேட்டிங் மீது நம்பிக்கை வைத்தால் நிச்சயம் அவரால் மீண்டும் சிறப்பாக விளையாட முடியும். மெதுவாக விளையாடினாலோ அல்லது மென்மையான ஒரு ஷாட் ஆடினாலோ ஆட்டமிழந்து விடுவோம் என்று நினைப்பதால் தான் அவர் அதிரடியாக விளையாடி வருகிறார்.

இதையும் படிங்க : ஆஸிக்கு எதிரா 204 ரன்ஸ்.. சென்னையில் பயிற்சி.. சச்சினை பாத்தாவது திருந்துங்க.. இந்தியாவுக்கு கவாஸ்கர் அட்வைஸ்

இதன் காரணமாக எல்லா பந்தையும் அடிக்கச் சென்றால் நிச்சயம் அதில் ஆபத்து அதிகம் எனவே டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை பேட்டிங் டெக்னிக்கை நம்பி விளையாட வேண்டும் என தினேஷ் கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -