நியூசிலாந்துக்கு எதிராக நிறைவு பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 3 – 0 என்ற கணக்கில் இந்தியா வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. அதனால் 12 வருடங்கள் கழித்தும் சொந்த மண்ணில் முதல் முறையாகவும் இந்தியா ஒயிட் வாஷ் தோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற நட்சத்திர வீரர்கள் சுமாராக விளையாடியது முக்கிய காரணமானது.
அந்த இருவருமே கடந்த பல வருடங்களாக ரஞ்சிக் கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் விளையாடவில்லை. அதுவே ஸ்பின்னர்களுக்கு எதிராக அவர்கள் தடுமாறுவதற்கு காரணம் என்று நிறைய முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் பெரிய அவர்களுக்கு முன்பு உள்ளூரில் விளையாடி தயாராவார் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சச்சினை பாருங்க:
குறிப்பாக 1998 ஆஸ்திரேலிய தொடருக்கு தயாராக சச்சின் டெண்டுல்கர் உள்ளூரில் விளையாடியது பற்றி கவாஸ்கர் நினைவு கூர்ந்தது பின்வருமாறு. “இதனால் தான் சச்சின் சச்சினாக திகழ்கிறார். அவர் தனக்காகவும் தன்னுடைய அணிக்காகவும் செய்ய விரும்பியதற்காக செய்த விஷயங்களுக்கு பெருமையுடன் இருந்தார். குறிப்பாக ரஞ்சிக் கோப்பை சாம்பியன் அணியான மும்பைக்காக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர் 200 ரன்கள் (204 ரன்கள்) அடித்ததை மறக்காதீர்கள்”
“பின்னர் சென்னைக்கு சென்ற அவர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணனை அரௌண்ட் தி விக்கட் திசையில் பந்து வீசச் சொல்லி ஸ்லாக் ஸ்வீப் மற்றும் இன்சைட் அவுட் ஷாட்டுகளை அடிக்கும் பயிற்சியை எடுத்தார். ஷேன் வார்னேவை சமாளிப்பதற்காக அவர் அந்த பயிற்சிகளை எடுத்தார். அப்படி செய்த காரணத்தாலேயே சச்சின் கிட்டத்தட்ட 16,000 டெஸ்ட் ரன்கள் மற்றும் 100 சர்வதேச சதங்கள் அடித்துள்ளார்”
இனியாவது திருந்தாங்க:
“அது போன்ற தயாராகும் முறைகள் தான் தற்போதைய இந்திய அணியில் அனைவருக்கும் தேவைப்படுகிறது. நீங்கள் சிறிது நாட்கள் விளையாடாமல் இருந்தால் உங்களுடைய உடலின் வேகம் குறைந்து விடும். கிரிக்கெட்டை தாண்டி டென்னிஸ் போன்ற அனைத்து விளையாட்டிலும் தாகத்துடன் இருப்பவர்கள் ஓய்வெடுத்தால் இது போன்ற நிலைமை ஏற்படும்”
இதையும் படிங்க: பிசிசிஐக்கு நல்ல பாடம்.. அப்போவே ரோஹித், கோலி இதை செஞ்சுருந்தா தோல்வி கிடைச்சுருக்காது.. சஞ்சய் மஞ்ரேக்கர்
“ஒருவேளை காயம் ஏற்பட்டால் அது இன்னும் மோசமாகி விடும். அதிலிருந்து மீண்டு வந்து பெரிய தொடர்களை வெல்வது மிகவும் கடினம் ஆகிவிடும்” என்று கூறினார். அவர் கூறுவது போல இப்போதுள்ள விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் தங்களை சூப்பர் ஸ்டார் வீரர்களாக நினைத்துக் கொள்கிறார்கள். அதனால் இந்தியாவுக்கு விளையாடி முடித்த பின் லண்டன் போன்ற வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்