பிசிசிஐக்கு நல்ல பாடம்.. அப்போவே ரோஹித், கோலி இதை செஞ்சுருந்தா தோல்வி கிடைச்சுருக்காது.. சஞ்சய் மஞ்ரேக்கர்

Sanjay Manjrekar 2
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 3 – 0 என்ற கணக்கில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. அதனால் 12 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் முதல் முறையாக இந்தியா ஒரு தொடரில் தோற்றது. அத்துடன் வரலாற்றிலேயே முதல் முறையாக 3 – 0 என்ற கணக்கில் இந்தியா ஒரு தொடரில் ஒய்ட் வாஸ் தோல்வியையும் சந்தித்தது.

இந்த தோல்விக்கு விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகிய சீனியர்கள் சிறப்பாக விளையாடாதது முக்கிய காரணமாக அமைந்தது. அதற்கு அவர்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடாததே காரணம் என்று நிறைய முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகிறார்கள். சொல்லப்போனால் கடந்த இலங்கை ஒருநாள் தொடரில் 27 வருடங்கள் கழித்து தோற்ற பின் இந்திய அணி வீரர்கள் துலீப் கோப்பையில் விளையாடினார்கள்.

- Advertisement -

பிசிசிஐக்கு பாடம்:

அதில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் விளையாடுவார்கள் என்று ஆரம்பத்தில் செய்திகள் வெளியானது. ஆனால் நட்சத்திர அந்தஸ்து காரணமாக அவர்களுக்கு மட்டும் விடுப்பு கொடுக்கப்படுவதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார். இருப்பினும் அவர்கள் துலீப் கோப்பையில் விளையாட வேண்டும் என்று சுனில் காவாஸ்கர், சஞ்சய் மஞ்ரேக்கர் போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சித்தார்கள்.

குறிப்பாக சஞ்சய் மஞ்ரேக்கர் ஆகஸ்ட் 28ஆம் தேதி தம்முடைய ட்விட்டரில் புள்ளிவிவரத்துடன் பதிவிட்டது பின்வருமாறு. “கடந்த 5 வருடங்களில் இந்தியா 249 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் ரோஹித் 59%, கோலி 61%, பும்ரா 34% போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளனர். எனவே ஏற்கனவே போதுமான ஓய்வு எடுத்த அவர்கள் துலீப் கோப்பையில் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.

- Advertisement -

தோல்வி கிடைச்சுருக்காது:

ஆனாலும் அவர்களுடைய பேச்சைக் கேட்காமல் உள்ளூரில் விளையாடாத ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் நேரடியாக களமிறங்கினார்கள். கடைசியில் அது இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இந்நிலையில் நட்சத்திர அந்தஸ்து பார்த்து சீனியர் வீரர்களுக்கு உள்ளூரில் விளையாடுவதிலிருந்து விடுப்பு கொடுத்த பிசிசிஐக்கும் தேர்வுக்குழுவுக்கும் நியூஸிலாந்து நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுத்ததாக சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 42 வயசு வெறும் 20 பந்துகள்.. முடிஞ்சு போனதா சொன்ன தோனி இந்த இம்பேக்ட் செய்றாரு.. பாண்டிங் பாராட்டு

அதனால் இனிமேலாவது அந்த தவறை செய்யக்கூடாது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “ஏற்கனவே ஓய்வெடுத்த வீரர்களுக்கு நட்சத்திர அந்தஸ்து காரணமாக ஓய்வு கொடுக்கக் கூடாது என்பதே இந்த தோல்வியிலிருந்து தேர்வுக்குழுவினர் கற்றுக்கொண்ட பெரிய பாடமாகும். ரோஹித், கோலி ஆகியோர் துலீப் கோப்பையில் விளையாடியிருந்தால் மட்டுமே நல்ல பயனை பெற்றிருப்பார்கள் என்று நான் மீண்டும் சொல்கிறேன்” எனக் கூறினார்.

Advertisement