இதெல்லாம் எனக்கு கைவந்த கலை. இப்படி போட்டி நடந்தாலும் நான் சூப்பரா விளையாடுவேன் – தினேஷ் கார்த்திக் அதிரடி

karthik
- Advertisement -

2020ஆம் ஆண்டில் இந்தியாவில் நடக்க வேண்டிய ஐபிஎல் தொடர் தற்போது காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஐபிஎல் தொடர் நடக்குமா என்பது சந்தேகம் தான். இதன் காரணமாக வீட்டிலேயே முடங்கி இருக்கும் பல வீரர்கள் தங்களது ரசிகர்களுடன் சமூகவலைதளத்தில் உரையாடி வருகின்றனர். சமீபத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் ஒரு உரையாடலில் பல விஷயங்களைப் பற்றி பேசினார்.

Karthik

- Advertisement -

அதில் ரசிகர்கள் இல்லாமல் போட்டியில் விளையாடுவது குறித்து பேசிய கார்த்திக் : எங்களில் பல வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் ஆடும் போது மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல்தான் ஆடினோம். எனவே ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் தொடரில் ஆடுவது உங்களுக்கு புதிதாக இருக்காது. ஆனால் ஐபிஎல் தொடரில் நாங்கள் ரசிகர்களுடன் தான் ஆடி இருக்கிறோம். இதனால் இது சற்று வித்தியாசமாக இருக்கும் என்று கூறுகிறார்.

அதனை தாண்டி வர்ணனையாளர்கள் வீரர்களை பற்றி பேசும் போது சற்று மன வருத்தமாக இருக்கும். ஆனால் அவர்கள் உங்களை பற்றி பேசவில்லை, உங்களது ஆட்டத்தைப் பற்றி தான் பேசுகிறார்கள் என்று நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு முறை ஒரு பிரபல வர்ணனையாளரிடம் ஒரு வீரர் சென்று, ‘ஏன் என்னை பற்றி அப்படி பேசினீர்கள் என்று கேட்டார்?

Karthik

அதற்கு அவர் ‘என் வேலை பேசுவது’ ‘உங்கள் வேலை விளையாடுவது’ நாம் இருவரும் நம் வேலைகளை மட்டும் பார்ப்போம் என்று பதிலளித்துள்ளார். இதனை எல்லாம் குறிப்பிட்டு வர்ணனையாளர்கள் அவர்கள் வேலையை பார்க்கட்டும், வீரர்கள் நம் வேலையை பார்ப்போம் என்று வீரர்களுக்கும் அறிவுரை கூறியுள்ளார் தினேஷ் கார்த்திக்.

Karthik-1

கார்த்திக் இவ்வாறு பேசியதற்கு ஒரு பின்னணியும் உள்ளது. அதுயாதெனில் இந்த வருட ஐ.பி.எல் தொடர் ரசிகர்கள் இன்றி நடத்தப்படவும் வாய்ப்புள்ளது என்று ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளதால் தினேஷ் கார்த்திக் அந்தகேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement