மோர்கன் – அஷ்வின் மோதல் ஏற்பட்டதுக்கு காரணமே இதுதான் – தினேஷ் கார்த்திக் விளக்கம்

Ashwin-1
- Advertisement -

நேற்று முன்தினம் ஷார்ஜாவில் நடைபெற்ற லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி அணியானது 127 ரன்கள் மட்டுமே குவிக்க அடுத்ததாக விளையாடிய கொல்கத்தா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்யும்போது 19வது ஓவரின் கடைசி பந்தை பண்ட் எதிர்கொண்டார். அப்போது அவர் ஒரு ரன் எடுக்க பந்தை தட்டி விட்டு ஓடும் போது ராஜஸ்தான் அணியின் பீல்டர் பந்தினை பிடித்து த்ரோ செய்தார்.

kkrvsdc

- Advertisement -

அந்த பந்து ரிஷப் பண்ட் உடம்பின் மீது பட்டு சென்றது. இதனை கவனித்த அஷ்வின் இரண்டாவது ரன்னிற்கு பண்டை அழைத்தார். பொதுவாக கிரிக்கெட்டில் பீல்டர்கள் பந்தை பிடித்து எரியும் போது பேட்ஸ்மேன் உடம்பில் பட்டு விலகி சென்றால் அடுத்த ரன் ஓடமாட்டார்கள் இது எழுதப்படாத மரபாக அனைத்து கிரிக்கெட் வீரர்களும் பின்பற்றிவரும் ஒரு நடைமுறையாகும். ஆனால் அதனை மீறி அஸ்வின் ரிஷப் பண்ட்டை இரண்டாவது ரன்னிற்கு அழைத்து ஓடினார். இதனால் அப்போதே சிறிது சலசலப்பு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து 20 ஓவரில் முதல் பந்திலேயே அஸ்வின் டிம் சவுதியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். உடனே அஸ்வின் வெளியேறும்போது சவுதி அவரை நோக்கி ஏதோ கூறினார். அஸ்வினும் பதிலுக்கு ஏதோ கூற இருவருக்கும் வார்தைப்போர் முற்றியது. அதனை கவனித்த கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கனும் அஷ்வினை நோக்கி சில வார்த்தைகளை பகிர்ந்து கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

morgan

உடனே இதையெல்லாம் கவனித்த தினேஷ் கார்த்திக் உடனடியாக சென்று அஷ்வினை சமாதானம் செய்து பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில் இப்படி அஷ்வினுக்கும் மோர்கனுக்கும் சண்டை வர காரணம் என்ன என்பது குறித்து தற்போது தினேஷ் கார்த்திக் தனது விளக்கத்தினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

morgan

ராகுல் த்ரிப்பாதி பீல்டிங் செய்யும் போது பந்தை பிடித்து த்ரோ செய்தார் அது பண்ட்டின் உடம்பில் பட்டது. மறுமுனையில் இருந்த அஷ்வின் இரண்டாவது ரன்னுக்கு ரிஷப் பண்ட்-ஐ அழைத்து ஓடினார். கிரிக்கெட்டில் இது போன்று பந்து ஒரு வீரரின் மீது பட்டால் அடுத்த ரன் ஓட மாட்டார்கள். ஆனால் அஷ்வின் அதைமீறி இரண்டாவது ரன்னை ஓடி முடித்தார். இதுகுறித்து பேச வேண்டும் என்றால் நிறைய விஷயங்களைப் பேசலாம்.

இதையும் படிங்க : இவரோட விக்கெட்டை எடுத்தது தான் போட்டியின் திருப்புமுனை. நாங்க ஜெயிக்க இதுதான் காரணம் – கோலி ஹேப்பி

ஆனால் என்னை பொறுத்தவரை அந்த விடயம் குறித்து தான் அவர்கள் மோதிக்கொண்டார்கள். நான் அப்போது அவர்கள் இருவரையும் சமாதானம் செய்யவே அங்கு சென்றேன். அது தவிர வேறு எந்த பிரச்சினையும் இல்லை என தினேஷ் கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement