ரிட்டயர்டு ஆகாமலே நான் வர்ணனையாளராக பணியாற்ற இதுவே காரணம் – மனம்திறந்த தினேஷ் கார்த்திக்

Karthik
- Advertisement -

இந்திய அணியின் வீரரான தினேஷ் கார்த்திக் கடந்த 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்று விளையாடிய பின்னர் இதுவரை இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்காமல் இருந்து வருகிறார். ஆனாலும் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் தற்போது ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியை வர்ணனை செய்ய ஒப்புக்கொண்டார்.

Karthik

- Advertisement -

உலகெங்கும் ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக தற்போது வர்ணனை செய்ய வீரர்கள் ஒப்புக்கொள்ளாத நிலையில் இந்தியா சார்பாக சுனில் கவாஸ்கர் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் கலந்துகொண்டு வர்ணனையாளராக பணியாற்றினார். இதில் முதல் முறையாக வர்ணனை செய்த கார்த்திக் களத்தில் இருக்கும் வீரர்களின் செயல்பாடுகளை தெள்ளத்தெளிவாக தனது அனுபவத்தின் மூலம் சரியாக குறிப்பிட்டதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பினை பெற்றார்/

அதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் முடிந்து இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான தொடரின் போது இவருக்கு வர்ணனையாளர் வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து இந்த இங்கிலாந்து இலங்கை தொடரில் ஒரு சர்ச்சையான கருத்தினை வர்ணனையின் போது பேசி சிக்கிய கார்த்திக் அதற்காக ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்டதும் நாம் அறிந்ததே.

karthik 1

இந்நிலையில் இப்படித்தான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறாமல் வர்ணனையாளராக முடிவு செய்ததற்கு காரணம் என்ன என்று அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : முதலில் இந்த பிம்பத்தை உடைக்க விரும்புகிறேன். ஓய்வு பெற்ற வீரர்கள் மட்டுமே வர்ணனை செய்ய வேண்டும் என்ற சட்டம் இருக்கிறதா ? கூடைப்பந்து, கால்பந்து போன்ற விளையாட்டுகளில் இருக்கும் வீரர்கள் ஓய்வு நேரத்தில் வர்ணனை செய்வது போன்று நானும் செய்கிறேன்.

Karthik

இங்கிலாந்து இலங்கை தொடருக்கான டி20 போட்டிகளில் கூட அந்த அணியின் டெஸ்ட் பவுலர் ஆண்டர்சன் வர்ணனை செய்தார். இதனால் அவர் என்ன ஓய்வை அறிவித்து விட்டார் என்று கூறமுடியுமா ? அதே போன்று தான் நானும் நான் இப்போதைக்கு ஓய்வு அறிவிக்க வாய்ப்பு இல்லை தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவேன். அதே சமயம் எனக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் நான் வர்ணனையாளர் பணியை செய்வேன் என கார்த்திக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement