டிராவிட் அவங்க 2பேர் விடயத்திலும் ஒரு கடுமையான முடிவு எடுத்தா தான் இந்தியா உருப்படும் – தினேஷ் கார்த்திக்

Karthik
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 202 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் தொடக்க வீரரான கேப்டன் ராகுல் (50) மற்றும் பந்து வீச்சாளர் அஷ்வின் (46)ஆகியோரைத் தவிர இந்திய அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் ரன்களை குவிக்க மிகவும் தடுமாறினார்கள்.

rahul 1

- Advertisement -

அதிலும் குறிப்பாக கடந்த பல தொடர்களாகவே ரன்கள் குவிப்பதில் மிகப்பெரிய தடுமாற்றத்தை சந்தித்துவரும் சீனியர் வீரர்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தது பெரிய விமர்சனத்தை எழுப்பியுள்ளது. சிறப்பாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் புஜாரா 33 பந்துகளில் 3 ரன்கள் எடுத்த நிலையில், அதற்கு அடுத்த பந்திலேயே ரஹானேவும் ஆட்டம் இழந்தது தற்போது மிகப்பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இவர்கள் இருவரது விடயத்திலும் முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டுமென தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தனது கருத்தினை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : உலகின் மிகச் சிறந்த அணியாக தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் வலம் வரும் இந்திய அணியில் மூன்றாவது இடத்திலிருந்து இருந்து கொண்டு 3 வருடங்களாக சதம் அடிக்காமல் விளையாடி வருவது நல்லதல்ல.

pujara 1

இந்திய அணி உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டியது அவசியம். அந்த வகையில் எந்த ஒரு பெரிய ரன்களும் இன்றி புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் தொடர்ந்து விளையாடி வருகிறார்கள். அதோடு அந்த இரு இடங்களை குறித்த முக்கிய முடிவினை ராகுல் டிராவிட் எடுத்தே ஆகவேண்டும். ஏனெனில் தனது கேரியரில் ஒரு கட்டத்தில் ராகுல் டிராவிட் மூன்றாவது இடத்தை இழந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : INDvsRSA : நான் உங்கள எப்படி நெனச்சேன். கடைசில இப்படி பண்ணிடீங்களே – ஷான் பொல்லாக் ஆதங்கம்

அந்த இடத்தை பிடித்த புஜாரா தற்போது அவரது கரியரின் முடிவு வந்துள்ளதுள்ளார். அதனை உணர்ந்து டிராவிட் முடித்து வைக்கவேண்டும் என்றும் புஜாரா மற்றும் ரஹானே ஆகியோரது இடத்திற்கு சரியான மாற்று வீரர்களை இளம் வீரர்களாக கொண்டுவந்து அந்த இடத்தை நிரப்ப வேண்டும் என்றும் தினேஷ் கார்த்திக் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement