தோனிக்கு முன்னாடியே நான் அறிமுகமாகிட்டேன். ஆனா அதன் பிறகு.. தோனி மேனியா குறித்து – தினேஷ் கார்த்திக் கருத்து

DK-and-MS
- Advertisement -

இந்திய அணியின் அனுபவ வீரரான தினேஷ் கார்த்திக் ஆர்.சி.பி அணிக்காக அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில் அவருடைய ஆரம்ப கால கிரிக்கெட் குறித்து பேசியுள்ள விடயங்கள் மற்றும் தோனியுடன் இருந்த காம்பெடிஷன் குறித்து பல்வேறு விடயங்களை பகிர்ந்துள்ளார். அந்த பேட்டியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் 37 வயதான தினேஷ் கார்த்திக் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக 2004-ஆம் ஆண்டு தோனி அறிமுகம் ஆவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே அறிமுகமாகிவிட்டார்.

DK

- Advertisement -

கடந்த 2004-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒருநாள் போட்டியில் தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்காக அறிமுகமாகி இருந்தார். அதேபோன்று அதே ஆண்டு நவம்பர் மாதம் தன்னுடைய முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் அவர் அறிமுகமாகியிருந்தார். ஆனால் அதன்பிறகு ஒரு மாதம் கழித்து தோனி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி தனது இரண்டாவது தொடரிலேயே பாகிஸ்தான் அணிக்கு எதிராக 148 ரன்கள் குவித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துவிட்டார்.

அதன் பிறகு 2007-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையையும் கேப்டனாக கைப்பற்றியதால் அவருடைய கிராப் எங்கோ சென்று விட்டது. தோனி குறித்து தினேஷ் கார்த்திக் பேசுகையில் கூறியதாவது : நான் தோனிக்கு முன்னதாகவே அறிமுகம் ஆகிவிட்டேன். ஆனால் இந்திய ஏ அணிக்காக விளையாடிய போது நானும் தோனியும் ஒன்றாகவே சில தொடர்களில் பங்கேற்றோம். அப்போதுதான் தோனியை நான் முதன் முதலில் பார்த்தேன்.

Dinesh Karthik MS Dhoni

பிறகு இந்திய அணிக்காக நான் தேர்வு செய்யப்பட்டேன். ஆனால் தோனி இந்திய அணிக்கு தேர்வாக இன்னும் சில தொடர்கள் பிடித்தது. இருப்பினும் எனக்கு பின்னால் அறிமுகமான தோனி பேட்டிங்கில் டாப் ஆர்டரில் தனது அதிரடியின் மூலம் பவுண்டரி, சிக்சர் என அடித்து குறுகிய காலத்திலேயே அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து விட்டார். அதன் பிறகு தோனி மேனியா அங்கே துவங்கிவிட்டது.

- Advertisement -

நான் தோனி போன்ற ஒரு சிறப்பான வீரருக்கு எதிராக வாய்ப்பினை பெற தொடர்ச்சியாக கடுமையாக போராடினேன். ஆனாலும் தோனி மிகச் சிறப்பாக ரன்களை குவித்ததோடு மட்டுமின்றி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தகுந்தவாரும் பொறுமையாக விளையாடினார். அதோடு விக்கெட் கீப்பிங்கிலும் அசத்தினார். அதோடு கூடுதலாக கேப்டன் பொறுப்பும் அவரிடம் இருக்கவே அவருடன் எனக்கான போட்டி எப்போதுமே கடுமையாகவே இருந்தது என்று தினேஷ் கார்த்திக் கூறினார்.

இதையும் படிங்க : IND vs AUS : பி.சி.சி.ஐ வெளியிட்ட விடியோவால் வந்த குழப்பம் – அப்படி என்ன பண்ணியிருக்காங்க பாருங்க

மேலும் நான் எப்பொழுதும் தொடர்ச்சியாக என்னுடைய வாய்ப்புக்காக இன்றளவும் முயற்சி செய்து வருகிறேன் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது. கடைசியாக கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த தினேஷ் கார்த்திக் சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவருடைய வயதை காரணம் காட்டி அவரை இந்திய டி20 அணியிலிருந்து நிர்வாகம் நீக்கியது குறிப்பிடத்தக்கது.

Advertisement