நான் பாத்ததிலேயே இதுதான் பெஸ்ட் டெஸ்ட் மேட்ச். 20 வருட அனுபவத்தை பகிர்ந்த – தினேஷ் கார்த்திக்

Karthik
- Advertisement -

தமிழக கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் தற்போது இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். முன்னனி வர்ணனையாளர்கள் பலரும் கொரனா பயம் காரணமாக இந்த இறுதிப் போட்டியில் வர்ணனை செய்ய தயக்கம் காட்டியதால், தினேஷ் கார்த்திக்கை வர்ரணனையாளராக நியமித்தது ஐசிசி. அதன்படி நேற்று முன்தினம் தொடங்கிய இறுதிப் போட்டியில் வர்ணனை செய்ய ஆரம்பித்த அவர், சர்வதேச அளவிலான போட்டியில் முதல் முறையாக வர்ணனையாளராக செயல்பட்டு கலக்கி வருகிறார்.

karthik 1

- Advertisement -

அவருடன் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் மற்றும் இயான் பிஷப், சைமன் டௌல், நசீர் உசைன் ஆகியோரும் வர்ணனையாளர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தின்போது வர்ணனை செய்து கொண்டிருந்த இவர்கள் மத்தியில் இதுவரை நடைபெற்றுள்ள டெஸ்ட் போட்டிகளிலேயே எந்த போட்டி மிகவும் சிறந்தது என்ற உரையாடல் எழுந்தது. இதில் பேசிய கார்த்திக், 2001ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிதான் சிறந்த போட்டி என்று தனது கருத்தைக் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் அந்த தொடரின்போது அவர் மைதானத்திற்கு வெளியே பால் பாயாக செயல்பட்டதையும் கூறி இருக்கிறார். அவர் குறிப்பிட்ட அந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியானது முதல் இன்னிங்சில் மோசமாக விளையாடி பாலோ ஆன் பெற்றதால், இரண்டாவது இன்னிங்சிலும் அதேபோல ஆடி தோல்வியைத் தழுவும் என்றிருந்த நிலையில், விவிஎஸ் லஷ்மன் மற்றும் ராகுல் ட்ராவிட் ஆகிய இருவரின் அபாரமான பார்ட்னர்ஷிப்பினால் அந்த போட்டியை இந்தியா வென்றது. டெஸ்ட் வராலாற்றில் பாலோ ஆன் பெற்ற அணி அந்த போட்டியில் வெற்றி பெறுவது மூன்று முறை மட்டுமே நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Dravid 1

இந்த போட்டி குறித்து பேசிய கார்த்திக் கூறியதாவது, கல்கத்தாவில் நடந்த அந்த போட்டிக்கு பின்னர் மூன்றாவது டெஸ்ட் போட்டியானது சென்னையில் நடைபெற்றது. அப்போது அந்த போட்டியில் நான் பால் பாயாக இருந்தேன். இந்திய வீரர்களுக்கு பந்தை எடுத்துக்கொடுத்தது சிறந்த அனுபவமக இருந்தது. அதற்கு முந்தைய போட்டியில் ஒரு நாள் முழுவதும் இந்திய வீரர்கள் விக்கெட் இழக்காமல் இருந்தனர். இந்தியாவின் ஒரு இளம் வீரனாக அது எனக்கு நம்ப முடியாத அளவிற்கு இருந்தது. ஏனென்றால் அப்போதைய ஆஸ்திரேலிய அணியின் பலம் என்னவென்று நம் அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான் என்று அவர் கூறினார்.

dravid

மும்பையில் நடைபெற்ற அந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த போதிலும், அடுத்த இரண்டு போட்டிகளையும் வெற்றி பெற்று இந்திய அணி அத்தொடரை கைப்பற்றியது என்பதோடு மட்டுமல்லாமல், அதுவரை தொடர்ந்து 16 போட்டிகளாக தோல்வியே கண்டிராத ஆஸ்திரேலிய அணியை தோற்கடித்த அணியாக இந்திய அணி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement