கடைசி நேரத்தில் தடுமாறியது ஏன் ..! நாங்கள் செய்த தவறு இதுதான் ..! – தினேஷ் கார்த்திக் வருத்தம்..?

karthik
- Advertisement -

நேற்று(மே 25 ) இரவு கொல்கத்தா ஹெடன் கார்டன் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களை எடுத்திருந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக யாரும் 35 ரன்களுக்கு மேல் அடிக்கவில்லை. இதன் பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 160 ரன்களை எடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
dinesh karthikk

இந்த போட்டி முடிந்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் ” இந்த போட்டியில் நான், நிதிஷ் அல்லது ராபின் பொறுப்பாக நின்று விளையாடி போட்டியை முடித்திருக்க வேண்டும். ஆனால் நான் சிறப்பாக விளையாடாதது என்னுடைய தவறுதான்” என்று தெரிவித்திருந்தார். ஆனால் உண்மையில் கொல்கத்தா அணியின் தோல்விக்கு என்ன காரணம், எந்த இடத்தில் தினேஷ் கார்த்திக் தவறு செய்தார்.

- Advertisement -

ஐ.பி.எல் தொடரில் முதன் முறையாக கேப்டன் பதவியை பொறுப்பேற்று விளையாடிய தினேஷ் கார்த்திக், இந்த ஆண்டு கொல்கத்தா அணியை சிறப்பாக வழிநடத்தி வந்தார். ஆனால் நேற்று நடந்த போட்டியில் அவர் ஒரு சில தவறுகளை செய்திருந்தார். மேலும் நேற்று நடந்த போட்டியில் கொல்கத்தா அணி தோல்வியடைந்தததற்கான காரணம் என்னவென்று கொஞ்சம் அலசலாம்.
dinesh

* நேற்று நடந்த கொல்கத்தா மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் இரண்டாவதாக பந்துவீசி இருந்தால் காற்றின் ஈரப்பதம் காரணமாக பந்து நன்றாக சூழன்டிருக்கும், இதனால் விக்கெட்டுக்கும் அதிகம் விழுந்திருக்கும். அப்படி இருக்க டாஸ் வென்றும் தினேஷ் கார்த்திக் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது ஏன் ?

* இந்த போட்டியில் அனுபவமிக்க பந்து வீச்சாளரர்களான ரஸலுக்கு 1 ஓவரும், சாவ்லாவிற்கு 3 ஓவர்கள் மட்டும் கொடுத்து விட்டு, அனுபவமில்லாது பிரசித் கிருஷ்ணாவிற்கு 4 ஓவர்களை கொடுத்தது ஏன் ?
rashid

* இந்த போட்டியில் பிரசித் கிருஷ்ணா 20 வது ஒவேரில் மட்டும் 20 ரன்களை கொடுத்திருந்தார். மேலும் 4 ஓவர்களில் 59 ரன்களை கொடுத்தது கொல்கத்தா அணிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.

* ஹைதராபாத் அணி விளையாடிய போது 17.5 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 134 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அதன் பின்னர் 2 ஒவேரில் மட்டும் 40 ரன்களை வாரி கொடுத்துள்ளனர் கொல்கத்தா அணியின் பந்து வீச்சாளர்கள். ஒருவேளை இந்த தவரையெல்லாம் செய்யாமல் இருந்திருந்தால் கொல்கத்தா அணி வெற்றி பெற்றிருக்க அதிக வாய்ப்பு இருந்திருக்கும்.

Advertisement