முடிவுக்கு வரும் தமிழக வீரரின் கிரிக்கெட் வாழ்க்கை. இனிமே எந்த போட்டியிலும் விளையாட வாய்ப்பில்லை – விவரம் இதோ

Karthik
- Advertisement -

இந்திய அணியின் சீனியர் வீரர் தினேஷ் கார்த்திக் தற்போது கிரிக்கெட்டிலிருந்து முழுக்குப் போடும் நிலைக்கு சென்று விட்டார் என்றுதான் கூறவேண்டும். தொடர்ந்து கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக இந்திய அணியில் உள்ளே வெளியே ஆடிக் கொண்டிருந்த அவருக்கு 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இடம் கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை அதன் பின்னர் அவருக்கு இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்கவில்லை. இனியும் அவருக்கு இந்திய அணியில் இடம்கிடைக்கவே கிடைக்காது என்ற நிலைக்கு வந்துவிட்டார் .

Dkarthik

- Advertisement -

தொடர்ந்து நிராகரிக்கப்பட்ட அவரின் தலைமையில் தான் கொல்கத்தா அணி கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடியது. ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டனாக இருந்த தினேஷ் கார்த்திக் அவரால் இரண்டு வருடங்களாக சரிவர செயல்பட முடியவில்லை. இதன் காரணமாக 2020ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் பாதியில் அந்த அணியின் இயான் மார்கன் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

முதலில் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட தினேஷ் கார்த்திக்கு அடுத்த ஆண்டு அணியில் இடம் கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் தேசிய அணியான இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த இவருக்கு பல பிரச்சனைகள் காத்துக்கொண்டிருந்தது. அணியில் ரிஷப் பண்ட், கேஎல் ராகுல் என பலரும் விக்கெட் கீப்பிங் இடத்திற்கு போட்டி போட்டு வருகிறார்கள்.

dinesh karthikk

இதனால் டி20 உலகக் கோப்பை தொடரிலும் அவருக்கு இடம் கிடைக்க வாய்ப்பில்லை. இதனை தொடர்ந்து இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கின் காலம் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவே தெரிகிறது. மேலும்,, 2021 ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் ஏலத்தில் தினேஷ் கார்த்திக்கை கொல்கத்தா அணி கட்டிவிடலாம் என்ற செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் அவரை மீண்டும் அணியில் எடுக்கும் திட்டம் அந்த அணியிடம் இல்லை என்பதுபோல் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

இதனால் தமிழக வீரரான தினேஷ் கார்த்திக்கின் கிரிக்கெட் வாழ்க்கை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது எனவே கூறப்படுகிறது. இனியும் அவர் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட்டுவது எட்டாக்கனியாக மாறும் என்றும் அவர் விரைவில் ஓய்வு முடிவினை அறிவிப்பார் என்றே தெரிகிறது.

Advertisement