தோனிக்கு அடுத்து நடராஜன் தான் இதை செய்ஞ்சிருக்காரு. புதிய மைதானத்தை திறந்து வைத்து – தினேஷ் காத்திக் பேசியது என்ன?

DK-and-Nattu
- Advertisement -

தமிழக கிரிக்கெட் வீரரும் இந்திய அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளருமான நடராஜன் கட்டியுள்ள புதிய கிரிக்கெட் மைதானத்தின் திறப்பு விழாவானது இன்று சேலம் மாவட்டத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய அணியின் அனுபவ வீரரான தினேஷ் கார்த்திக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அந்த புதிய மைதானத்தை திறந்து வைத்தார். தன்னை போன்று சிறிய கிராமத்தில் இருந்து வந்து சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்காக நடராஜன் இந்த மைதானத்தை அமைத்துள்ளார்.

Nattu

- Advertisement -

விடாமுயற்சியும் கடின உழைப்பும் இருந்தால் எந்தத் துறையிலும் சாதிக்கலாம் என்பதற்கு ஒரு நம்பிக்கையாக விளங்கி வருபவர் நடராஜன். சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி என்கிற சிறிய கிராமத்தில் பிறந்து மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு ஐபிஎல் தொடரில் இடம் பெற்ற அவர் ஐபிஎல் தொடரிலும் முன்னணி வீரர்களை தனது யார்க்கர் பந்துவீச்சின் மூலம் உலகின் முன்னணி வீரர்களை திணறடித்து இந்திய அணிக்காக மூன்று விதமான கிரிக்கெட்டிலும் அறிமுகமாகி வரலாறு படைத்தார்.

இந்நிலையில் காயம் காரணமாக மீண்டும் இந்திய அணியில் இடம் பெற முடியாமல் தவித்து வரும் நடராஜன் தொடர்ந்து ஐபிஎல் மற்றும் டி.என்.பி.எல் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார். இந்நிலையில் தற்போது சேலம் மாவட்டத்தில் தான் கட்டியுள்ள புதிய கிரிக்கெட் மைதானத்தை தினேஷ் கார்த்திக் கையால் அவர் இன்று திறந்து வைத்தார். இந்த கிரிக்கெட் மைதானத்தில் நான்கு பிட்ச்கள், இரண்டு பயிற்சி தடங்கள், ஜிம், கேண்டீன் மற்றும் 100 பேர் அமர்ந்து உட்காரக்கூடிய பல வசதிகள் இருக்கின்றன.

Nattu

இந்நிலையில் இந்த மைதானத்தை திறந்து வைத்து பேசிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கூறுகையில் : நடராஜன் மிகவும் சுவாரஸ்யமான மனிதர். அவரின் கிரிக்கெட் பயணம் மிக சாதாரணமான ஒன்று அல்ல. அவரது இந்த பயணம் மற்றவர்களுக்கு ஊக்கம் அளிக்கக்கூடிய ஒன்று. பலரும் கிரிக்கெட்டில் முன்னேறிய பிறகு அவர்களுக்கு உதவியவர்களை மறந்து விடுவார்கள். ஆனால் இன்றளவும் அவரது வழிகாட்டியான ஜே.பி அவர்கள் இன்றும் அவர் அருகில் நின்று கொண்டிருக்கிறார்.

- Advertisement -

பெரிய நகரங்களில் இருந்து ஏராளமான வீரர்கள் வந்திருக்கிறார்கள். ஆனால் சின்ன ஊரிலிருந்து வந்து சாதித்தவர் தான் தல எம்.எஸ் தோனி. அதேபோன்று சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சின்னப்பம்பட்டி என்கிற சின்ன ஊரிலிருந்து வந்து சாதித்தவர் தான் நடராஜன். ஐபிஎல் தொடருக்கு பின்னர் நடராஜன் ஏன் இந்திய அணிக்காக விளையாடவில்லை? என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் ஹைடனும், பாண்டிங்கும் கூட என்னிடம் கேட்டிருக்கின்றனர்.

இதையும் படிங்க : இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக வர தேவையான தகுதிகள் என்ன? பிசிசிஐ ரூல்ஸ் இதோ

அந்த அளவிற்கு அவர் ஆஸ்திரேலியாவில் தாக்கம் ஏற்படுத்தி இருக்கிறார். இந்திய அணிக்காக நான் நீண்ட காலமாக விளையாடி இருக்கிறேன். எனக்கு கூட இப்படி ஒரு மைதானத்தை கட்ட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது இல்லை. ஆனால் தன்னை போன்று கஷ்டப்படும் வீரர்கள் முன்னேற வேண்டும் என்பதற்காக நடராஜன் இதனை செய்து காட்டியுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள் எனது தினேஷ் கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement