எனக்கு ரோஹித்தை பத்தி நல்லா தெரியும். இதுதான் லாஸ்ட் டைம் – தினேஷ் கார்த்திக் வெளிப்படை

Dinesh-Karthik
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியானது கடந்த 2013-ஆம் ஆண்டு ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றியபோது தோனி தலைமையிலான இந்திய அணியில் ரோகித் சர்மா இடம் பிடித்திருந்தார். அந்த தொடரில் ஷிகர் தவானுடன் இணைந்து துவக்க வீரராக விளையாடிய ரோகித் சர்மாவின் கிரிக்கெட் கரியர் அதன் பின்னரே முன்னேற்றத்தை காண ஆரம்பித்தது. 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் நிராகரிக்கப்பட்ட ரோகித் சர்மா பின்னர் தனது தொடர்ச்சியான விடாமுயற்சி காரணமாக இந்திய அணியில் இடம்பிடித்து நிரந்தர வீரராகவும் மாறினார்.

அதனை தொடர்ந்து கடந்த 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது உலக கோப்பை தொடரில் அவர் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட இருக்கிறார். அக்டோபர் 5-ஆம் தேதி இந்தியாவில் துவங்கவுள்ள உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்த இருக்கும் ரோஹித் இம்முறை நிச்சயம் கோப்பையை கைப்பற்றி தருவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் ரோகித் சர்மாவிற்கு இந்த தொடர்தான் கடைசி உலக கோப்பை தொடராக இருக்கும் என தமிழக வீரரும், ரோஹித்தின் நெருங்கிய நண்பருமான தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

ரோகித் சர்மா அவருடைய கரியரில் மிகப்பெரிய சாதனைகளை பல்வேறு வழிகளில் படைத்து விட்டார். என்னை பொறுத்தவரை இதுதான் அவருடைய கடைசி உலக கோப்பை தொடராக இருக்கும். ரோகித் என்னுடைய மிக நெருங்கிய நண்பர் அதோடு நாங்கள் ஒரு வீரராகவும், ஒரு மனிதராகவும் ஒன்றாகவே வளர்ந்தோம்.

- Advertisement -

எனக்கு தெரிந்து ரோகித் இம்முறை தான் கடைசியாக ஒருநாள் போட்டிகளுக்கான உலக கோப்பை தொடரில் விளையாடுவார் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : தற்போது ரோகித் சர்மாவிற்கு ஒரு அழகிய குடும்பம் உள்ளது. அவரும் ஒரு குடும்பத் தலைவராக சிறப்பாக அவர்களை பார்த்துக் கொள்கிறார். குடும்பத்துடன் நிறைய நேரத்தை மும்பையில் செலவிடும் அவர் கிரிக்கெட்டிலும் சரியான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்.

இதையும் படிங்க : டெய்லி இந்தியாவில் அதை சாப்பிடுறோம்.. அதான் எங்க ஃபீல்டிங் ஸ்லோவாகிடுச்சு.. சடாப், பாபர் பேட்டி

இன்று ரோகித் எவ்வளவு உச்சத்தில் இருந்தாலும் 20 ஆண்டுகளுக்கு முன்பு அவர் பழகிய நண்பர்களிடம் எப்படி இருந்தாரோ இன்றும் அதேபோல் மாறாமல் இருப்பதாகவும் ரோகித் சர்மா குறித்து தினேஷ் கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் 5 சதங்களை விளாசிய ரோஹித் இம்முறையும் இந்தியாவில் பல சதங்களை விளாசி கோப்பையை கைப்பற்றி தர வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement