IND vs AUS : தினேஷ் கார்த்திக் சொன்னதெல்லாம் நடக்குது – அப்போ கப் நமக்கு தானா?

Dinesh-Karthik-1
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணியின் அனுபவ வீரரான தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். ஏற்கனவே இங்கிலாந்தில் நடைபெற்ற தொடரின் போது வர்ணனையாளராக செயல்பட்ட தினேஷ் கார்த்திக் தனது அனுபவங்களை நேரலையில் பகிர்ந்து கொண்டது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றது.

IND vs AUS

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்தியாவில் நடைபெறும் இந்த தொடரில் முதல் முறையாக வர்ணனை செய்து வரும் தினேஷ் கார்த்திக் போட்டியின் போது கிரிக்கெட் குறித்த சில நுணுக்கமான விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி போட்டி நடைபெறும் போது ஏகப்பட்ட விடயங்களை சரியாக கனித்துக் கூறிய தினேஷ் கார்த்திக் சொன்ன ஒவ்வொன்றும் போட்டியில் நடந்தது அவருடைய கிரிக்கெட் அறிவினை வெளிக்காட்டியது.

அப்படி தினேஷ் கார்த்திக் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் என்னென்ன கணிப்புகளை சரியாக கூறியிருந்தார் என்பதை இந்த தொகுப்பில் காணலாம். அதன்படி ஆஸ்திரேலிய அணி நாக்பூர் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோதே நிச்சயம் இந்திய அணி இந்த டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் தான் விளையாடும் அதிலேயே இந்திய அணி வெற்றி பெற்று விடும் என்று கூறியிருந்தார்.

IND vs AUS Siraj SMith

அவர் சொன்னது போலவே இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் விளையாடாமலேயே இன்னிங்ஸ் வெற்றியினை பெற்றது. அதேபோன்று ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அலெக்ஸ் கேரி இந்திய அணியின் பந்துவீச்சில் இரண்டு பவுண்டர்களை ஸ்வீப் ஷாட் மூலம் அடித்தார்.

- Advertisement -

அப்போது பேசிய தினேஷ் கார்த்திக் நிச்சயம் இவர் இதே ஷாட்டை முயற்சிக்கும்போது தான் ஆட்டம் இழந்து வெளியேறுவார் என்று நேரலையில் கூறியிருந்தார். அவர் கூறியது போலவே அலெக்ஸ் கேரி அஸ்வின் பந்தை ஸ்வீப் செய்யும்போது எல்.பி.டபிள்யு மூலம் ஆட்டம் இழந்து வெளியேறினார். இப்படி தினேஷ் கார்த்திக் கூறிய ஒவ்வொன்றும் போட்டியில் அப்படியே நடந்ததால் நிச்சயம் அவர் கூறிய விடயங்கள் சாத்தியமாகும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க : வீடியோ : அதே ஷாட், அதே வேகம் – அச்சு அசல் மெல்போர்ன் விராட் கோலியை போலவே சேசிங் செய்து பாகிஸ்தானை சாய்த்த ஜெமிமா

இதே போன்று தினேஷ் கார்த்திக் இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே இந்திய அணி எளிதாக இந்த தொடரை வென்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்லும் என்று கூறியிருந்தார். அப்படி பார்க்கையில் தினேஷ் கார்த்திக் கூறியது போலவே இந்திய அணி கோப்பையை வெற்றி பெற்று டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு சென்று விடும் என்பதே ரசிகர்களின் நம்பிக்கையாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement