தென்னாப்பிரிக்க நாட்டில் இந்த ஆண்டு துவங்கிய எஸ்.ஏ டி20 லீக் கிரிக்கெட் தொடரில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக இன்று அறிமுகமான தமிழக வீரர் மற்றும் முன்னாள் இந்திய வீரருமான தினேஷ் கார்த்திக் தென்னாப்பிரிக்க நாட்டில் நடைபெறும் டி20 லீக்கில் இடம் பிடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 39 வயதான தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடரில் :
நான் விளையாட சம்மதித்தது இதுக்காகத்தான் :
257 போட்டிகளில் விளையாடி 4842 ரன்களை குவித்துள்ளார். அதுமட்டும் இன்றி ஐ.பி.எல் தொடரானது ஆரம்பத்தது முதல் இதுவரை 6 அணிகளுக்காகவும் அவர் விளையாடியுள்ளார். கடந்த ஆண்டு இறுதியாக இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம்பிடித்திருந்தார்.
கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடருக்கு பின்னர் ஓய்வையும் அறிவித்துவிட்டார். அதனை தொடர்ந்து பெங்களூரு அணி அவரை பேட்டிங் பயிற்சியாளராக நியமித்தது. சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் என அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் தினேஷ் கார்த்திக் ஓய்வு பெற்றதால் வெளிநாடுகளில் நடைபெறும் டி20 லீக்கில் பங்கேற்கலாம் என்ற அனுமதி கிடைத்தது.
அந்த வகையில் அடுத்ததாக அவர் தென்னாப்பிரிக்க டி20 லீக்கில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகிய தினேஷ் கார்த்திக் இன்று அந்த அணிக்காக அறிமுகமாகினார். இந்நிலையில் தென்னாப்பிரிக்க டி20 லீக்கில் விளையாட சம்மதித்தது ஏன்? என்பது குறித்து போட்டியின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு தினேஷ் கார்த்திக் அளித்த பதிலாவது :
உண்மையிலேயே நான் இந்த தொடரில் விளையாட ஒப்புக்கொண்டதற்கு 2 முக்கிய காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று யாதெனில் : ஐபிஎல் தொடருக்கு அடுத்து மிகவும் பிரபலமான தொடராக இந்த தொடர் மாறி வருவதாலே நான் இந்த தொடரில் விளையாட ஒப்புக்கொண்டேன்.
இதையும் படிங்க : யுவராஜ் மாதிரி அந்த திறமை கொண்ட சாம்சன்.. ஒரு வழியா அசத்துவதை பார்ப்பது நல்லாருக்கு.. சஞ்சய் பங்கர்
இரண்டாவதாக ராயல்ஸ் பிரான்ச்சைசியில் விளையாட வேண்டும் என்கிற ஆசை என்னிடம் இருந்தது. ஐபிஎல் தொடரில் ராயல்ஸ் அணிக்காக விளையாட முடியவில்லை. எனவே இந்த தொடரில் அந்த அணியுடன் இணைய வாய்ப்பு கிடைத்ததால் மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக்கொண்டேன் என தினேஷ் கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.