சொன்னா போதும் இந்திய அணியில் இணைய தயார். அதிரடி அறிவிப்பை வெளியிட தினேஷ் கார்த்திக் – எதற்கு தெரியுமா ?

Karthik
- Advertisement -

இந்திய அணி கடந்த ஜூன் மாதம் ஆரம்பத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து புறப்பட்டது. அதன் பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருப்பதால் தற்போது இங்கிலாந்திலேயே தங்கியுள்ளனர். ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி துவங்கும் இந்த தொடரானது செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி வரை நடைபெறும் மிகப்பெரிய தொடராக இருப்பதன் காரணமாக இந்திய அணி வீரர்கள் தங்களது குடும்பத்தினரை அவர்களுடனேயே அழைத்துச் சென்றனர்.

INDvsENG 1

- Advertisement -

மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் முடிந்து இங்கிலாந்து தொடர் நடைபெறுவதற்கு ஒரு மாதம் இடைவெளி உள்ளதால் இந்திய அணி வீரர்கள் தாங்கள் விரும்பும் இடங்களுக்கு வெளியே சுற்றுலா செல்லவும் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். இந்நிலையில் அப்படி வெளியில் சென்றிருந்த சிலருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

அதிலும் குறிப்பாக இந்திய அணியைச் சேர்ந்த 2 விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்கள் அதாவது ரிஷப் பண்ட் மற்றும் விருத்திமான் சஹா ஆகியோருக்குப் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதன் காரணமாக அவர்கள் இந்த தொடரில் விளையாடுவது இன்னும் உறுதியாகவில்லை. இதற்கிடையில் தற்போது அவர்களுக்கு பதிலாக ராகுல் அல்லது அபிமன்யு ஈஸ்வரன் ஆகிய இருவரில் ஒருவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக விளையாடுவார் என்று தெரிகிறது.

Saha

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் கொரோனா உறுதியான நிலையில் இந்திய அணியின் முன்னணி வீரரான தினேஷ் கார்த்திக் தான் அணியில் இணைய தயார் என்று ட்விட்டர் பக்கத்தின் மூலம் மறைமுகமாக கருத்தினை வெளியிட்டுள்ளார். அதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கிரிக்கெட் கிட்டை புகைப்படமாக பதிவிட்டு “ஜஸ்ட் சேயிங்” என்று பதிவிட்டுள்ளார். அதாவது இதற்கு அர்த்தம் யாதெனில் தற்போது இங்கிலாந்தில் வர்ணனையாளராக இருக்கும் தினேஷ் கார்த்திக் அவருடனேயே கிட் பேக்கையும் வைத்துள்ளதால் சொன்னால் போதும் இந்திய அணியில் தான் இணைய தயார் என்பது போல அந்த புகைப்படம் மூலம் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அவர் இந்திய அணியில் சேர்க்கப் பட வாய்ப்பு இருக்காது என்று கூறப்படுகிறது. ஆனாலும் அவரது இந்த ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement