IND vs ENG : கொஞ்சமும் நாகரிகம் இல்லையா, இங்கிலாந்து வாரியத்துக்கு தினேஷ் கார்த்திக் கேள்வி – நடந்தது என்ன

DInesh Karthik IND vs ENg Rishabh Pant Ravindra Jadeja
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக பர்மிங்காம் நகரில் ஜூலை 1-ஆம் தேதி துவங்கிய 5-வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான தொடக்கத்தை பெற்றுள்ளது. கடந்த வருடம் துவங்கிய இந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்த போது ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டி தற்போது நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா முதல் இன்னிங்சில் கடுமையாக போராடி 412 ரன்கள் சேர்த்தது. ஏனெனில் சுப்மன் கில் 17, புஜாரா 13, விஹாரி 20, விராட் கோலி 11, ஷ்ரேயஸ் ஐயர் 11 என முக்கிய பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்தின் தரமான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் பெவிலியன் திரும்பியதால் 98/5 என ஆரம்பத்திலேயே இந்தியா தத்தளித்தது.

அப்போது ஜோடி ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் மேற்கொண்டு விக்கெட்டை எளிதில் விடாமல் அற்புதமாக பேட்டிங் செய்தனர். அதில் ஒருபுறம் ஜடேஜா மெதுவாக பேட்டிங் செய்ய மறுபுறம் ஆண்டர்சன் உட்பட அனைத்து இங்கிலாந்து பவுலர்களையும் வெளுத்து வாங்கிய ரிஷப் பண்ட் 89 பந்துகளில் சதமடித்து மிரட்டினார். 6-வது விக்கெட்டுக்கு 222 ரன்கள் அபார பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை தூக்கி நிறுத்திய இந்த ஜோடியில் 19 பவுண்டரி 4 சிக்சர்களுடன் டி20 இன்னிங்ஸ் போல 146 (111) ரன்கள் குவித்த பண்ட் 131.53 என்ற மிரட்டல் ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி ரசிகர்களை மகிழ்வித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இந்தியா போராட்டம்:
அதனால் 338/7 என முதல் நாளில் நல்ல நிலையை போராடி எட்டிப்பிடித்த இந்தியாவுக்கு 2-வது நாளில் மறுபுறம் நங்கூரமாக பேட்டிங் செய்து கொண்டிருந்த ரவீந்திர ஜடேஜா 13 பவுண்டரியுடன் வெளிநாட்டு மண்ணில் தனது முதல் சதத்தை அடித்து 104 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆனால் கடைசில் களமிறங்கிய கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா இங்கிலாந்தின் நட்சத்திரம் ஸ்டூவர்ட் பிராட் வீசிய 84-வது ஓவரில் 4, 5, 7, 4, 4, 4, 6, 1 என 2 நோ-பால்களையும் சேர்த்து அடுத்தடுத்த பவுண்டரிகளுடன் 35 ரன்களை தெறிக்கவிட்டு அனைவரையும் திகைக்க வைத்தார்.

அதனால் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற உலக சாதனை படைத்த அவர் 31* (16) ரன்களுடன் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்தை தரமான பந்துவீச்சால் பதம் பார்த்த கேப்டன் பும்ரா 3 விக்கெட்டுகளை சாய்த்ததால் 2-வது நாள் தேநீர் இடைவெளியில் அந்த அணி 60/3 என்ற தடுமாறி வருவதால் இந்தியா வெற்றி பெறுவதற்கு சிறப்பாக போராடி வருகிறது.

- Advertisement -

நாகரிகம் இல்லையா:
முன்னதாக இப்போட்டி நடந்து கொண்டிருக்கும்போது ஜூலை 1-ஆம் தேதி டெர்பிஷைர் அணிக்கு எதிரான பயிற்சி டி20 போட்டியில் தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் தலைமையில் களமிறங்கிய இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணிக்கு எதிராக விளையாடியதால் அப்போட்டியில் பங்கேற்ற தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்கள் முதல் நாள் ஆட்டத்தை பார்க்க முடியவில்லை. அதனால் முதல் நாளில் அனலை தெறிக்கவிட்ட இந்தியாவின் ஆட்டத்தை அனைவரும் இங்கிலாந்தின் யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள “ஹைலைட்” வீடியோ வாயிலாக பார்த்தார்கள்.

அந்த வீடியோவுக்கு “அதிரடியான் பண்ட்டை அவுட் செய்த ஜோ ரூட்” என்ற பொருத்தமற்ற தலைப்பை அந்நாட்டு வாரியம் சூட்டியுள்ளது. அதை பார்த்த தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் கொஞ்சம் கூட அனாகரிகம் இல்லையா என்ற வகையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தை கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது முதல்நாளில் திண்டாடிய இந்தியாவை பண்ட் மற்றும் ஜடேஜா ஆகியோர் இணைந்து இங்கிலாந்தை சரவெடியாக எதிர்கொண்டு காப்பாற்றினார்கள். எனவே அதைப் பற்றி தலைப்பு வைக்காமல் 146 ரன்களை விளாசி ஏற்கனவே போட்டியை மொத்தமாக மாற்றிய ரிஷப் பண்ட்டை அதிர்ஷ்டத்தால் அவுட் செய்த ஜோ ரூட் முதல்நாள் முழுவதையும் ஆட்சி செய்வதை போல் இங்கிலாந்து வாரியம் தலைப்பு வைத்துள்ளது.

அதனால் அதிருப்தியடைந்துள்ள தினேஷ் கார்த்திக் முதல் நாள் முழுவதிலும் இரு அணிகளும் போராடியதற்கு ஏற்றார்போல் தலைப்பு வைத்திருக்கலாமே என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதுபற்றி தனது ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இதுபோன்ற ஒரு கவர்ச்சியான பரவசமான நாளின் ஆட்டத்திற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இதைவிட நல்ல தலைப்பை வைத்திருந்தால் பொருத்தமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். வெற்றிக்காக போராடிய இரு அணிகளில் ரிஷப் பண்ட் விளையாடிய தரம் மிகச்சிறப்பாக இருந்தது. இருப்பினும் அந்த நாளின் சுருக்கத்தை நீங்கள் இவ்வாறு தான் தீர்மானிப்பார்களா” என்று கூறியுள்ளார்.

Advertisement