ஆட்டத்தின் கடைசி பந்து.. நான் நினைத்தது இதுதான்..அடித்த சிக்ஸர்ரை பற்றி தினேஷ் கார்த்திக் கூறிய தகவல்.

karthik1
- Advertisement -

இலங்கையின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான நிடாஸ் டி20 கோப்பை முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடை பெற்றுவந்தது. பரபரப்பான இறுதிப்போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக்கின் அபாரமான சிக்ஸரால் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று கோப்பையை வென்று அசத்தியது.

DK1

- Advertisement -

வெற்றிக்களிப்புடன் தாயகம் திரும்பிய தினேஷ் கார்த்திக் இன்று சென்னை வந்துசேர்ந்தார். சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் “இறுதி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றிபெறுவோம் என்று நம்பினேன் என்றார்.

மேலும் பேசிய அவர் சென்னை அணிக்காக விளையாட வேண்டும் என்பது எனது கனவு. வாய்ப்பு வரும்போது நிச்சயம் விளையாடுவேன் என்றார். இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வரும்போது அதனை மிகச்சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். வங்கதேசத்திற்கு எதிரான இறுதிப்போட்டியில் 8பந்துகளில் 29ரன்களை குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement