ராகுல் டிராவிட் தான் இதுக்கெல்லாம் காரணம்…தினேஷ் கார்த்திக் ஓபன் டாக் ! – காரணம் இதுதான் ?

dravid
- Advertisement -

தற்போது நடந்து வரும் ஐபில் 4 போட்டிகளில் இளம் வீரர்களை கலக்கி வருகின்றனர். அதிலும் குறிப்பாக சொல்லப்போனால் u 19 உலக கோப்பையில் ஆடிய அணைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தயும் ஈர்த்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் சிறப்பாக ஆடுவதற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் தான் காரணம்  என்று கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

Karthik

- Advertisement -

கடந்த பிப்ரவரி மதம் நடைபெற்ற u 19 உலக கோப்பை இறுதியாட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணியின் இளம் வீரர்கள் கோப்பையை கைப்பற்றினர். இதற்கு பல்வேறு கிரிக்கெட் ரசிகர்களும் , கிரிக்கெட் முத்த வீரர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். மேலும் நடந்து முடிந்த அந்த u19 போட்டிகளில் சிறப்பாக ஆடிய ஒரு சில வீரர்கள் தற்போது ஐபில் அணிகளில் ஆடிவருகின்றனர்.

* கொல்கத்தா அணியில் :-சிவம் மாவி மற்றும் ஷிப்மன் கில்
* டெல்லி அணியில் :- பிரிதிவ் ஷா

போன்ற u19 இல் ஆடிய வீரர்கள் தற்போது ஐபில் தொடரில் சிறப்பாக ஆடிவருகின்றனர்.நேற்று பெங்களூருக்கு எதிரான போட்டிக்கு பின் பேட்டியளித்த தினேஷ் கார்த்திக் பேசுகையில் “u19 இல் விளையாடிய வீரர்கள் அனைவரும் சிறப்பாக ஆடி வருகின்றனர்.

rahul

மேலும் அவர்கள் இந்த வருடம் நடந்த u19 உலக கோப்பையை வென்றாலும் அவர்களுக்கு சிரிதயளவும் தலைக்கணம் என்பதே இல்லாமல் இருக்கிறது.அதற்கு முழு காரணமும் அவர்களின் பயிச்சியாளராக இருந்த டிராவிட் தான். இந்த முழு பெருமையும் அவரை தான் சாரும், எங்கள் அணியினல் உள்ள கில் மற்றும் மாவி ஆகிய இருவர்களும் எப்போதும் டிராவிட் பற்றி தான் பெருமையாக பேசி கொண்டே இருப்பார்கள் “என்று ட்ராவிடிற்கு புகழாரம் சூட்டியுள்ளார் தினேஷ் கார்த்திக்.

Advertisement