விராட் கோலி கிடையாது.. தற்போதைக்கு இவர்தான் ஆல் பார்மேட் பெஸ்ட் பேட்ஸ்மேன் – தினேஷ் கார்த்திக் பதில்

DK
- Advertisement -

தற்போதைய நவீன கிரிக்கெட் போட்டிகளில் ஆல் டைம் பேட்ஸ்மேன் யார்? என்பது குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பொதுவாகவே சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வகையான போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய வீரராக விராட் கோலி கடந்த பல ஆண்டுகளாகவே இருந்து வந்தார். அதன் பின்னர் சிறிது காலம் பாபர் அசாமை வைத்து விராட் கோலியுடன் ஒப்பிட்டு பேசினார்கள்.

தற்போதைய பெஸ்ட் பேட்ஸ்மேன் :

அதேபோன்று வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு காலகட்டங்களில் ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன், ஜோ ரூட் ஆகியோர் விராட் கோலியுடன் ஒப்பிடப்பட்டு பேசப்பட்டு வந்தார்கள். ஆனாலும் கிரிக்கெட் உலகின் முடி சூடா மன்னனாக கடந்த பல ஆண்டுகளாகவே விராட் கோலி இருந்து வந்தார்.

- Advertisement -

இந்நிலையில் அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடருடன் அவர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். இவ்வேளையில் விராட் கோலியின் பேட்டிங் பார்ம் சற்று இறக்கத்தை சந்தித்துள்ளது.

இந்நிலையில் தற்போதைய கிரிக்கெட் உலகில் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் ஆதிக்கம் செலுத்தி விளையாடும் வீரர் குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பேசி வரும் வேளையில் இந்திய அணியில் முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக்கிடம் ஒரு பிரத்தேக நிகழ்ச்சியில் 3 ஃபார்மேட்டிலும் சிறப்பாக விளையாடும் வீரர்? குறித்த கேள்வி வைக்கப்பட்டது.

- Advertisement -

அதற்கு யாரும் எதிர்பாரா வகையில் பதிலளித்த தினேஷ் கார்த்திக் : ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட்டை தேர்வு செய்து ஆச்சரியப்படுத்தினார். இது குறித்து தினேஷ் கார்த்திக் கூறுகையில் : தற்போது அனைவருக்கும் முன்னால் டிராவிஸ் இருக்கிறார் என்று நினைக்கிறேன். ஜெய்ஸ்வால் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார் ஆனால் இன்னும் அவருக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

இதையும் படிங்க : சரிந்து கிடக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்டை தூக்க இந்தியா இந்த ஹெல்ப் பண்ணனும்.. ஜஹீர் அப்பாஸ் கோரிக்கை

எனவே அவர் இந்த இடத்தை பிடிக்க இன்னும் சில கால அனுபவம் தேவை. தற்போதைய நிலவரப்படி மூன்று வகையான கிரிக்கெட்டிலும் டிராவிஸ் ஹெட் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கிறார் என்று நான் கூறுவேன் என தினேஷ் கார்த்திக் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement