
ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் டிசம்பர் 26ஆம் தேதி துவங்குகிறது. 1 – 1* (5) என்ற கணக்கில் சமனில் இருக்கும் இந்தத் தொடரை வெல்ல அப்போட்டியில் இந்தியா வெல்லும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. முன்னதாக இந்தத் தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலிக்கு நிகராக இளம் கிரிக்கெட் வீரரான சுப்மன் கில் சுமாராக விளையாடி இந்தியாவுக்கு பின்னடைவை கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் ஒருநாள், டி20 கிரிக்கெட்டைப் போல டெஸ்ட் போட்டிகளிலும் சுப்மன் கில் அதிரடியான ஷாட்டுகளை அடித்து சுமாராக விளையாடுவதாக தினேஷ் கார்த்திக் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சுப்மன் கில் கண்டிப்பாக பந்தை தள்ளுவத்தில் கொஞ்சம் டெக்னிக்கல் தவறை கொண்டுள்ளார்”
“வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் நீங்கள் அதிகமாக விளையாடும் போது இப்படி பந்தை தள்ளுவீர்கள். டிராவிஸ் ஹெட்டும் அதை செய்கிறார். ஆனால் அதையும் தாண்டி வெற்றிகரமாக செயல்படும் வழியைக் கண்டறிந்தார. ஆனால் சுப்மன் கில் போன்ற வீரர்கள் இந்தியாவில் பேட்டிங் செய்யும் விதம் மற்றும் சொந்த மண்ணுக்கு வெளியே பேட்டிங் செய்யும் விதம் ஆகியவற்றின் வலையில் சிக்கியுள்ளதாக நான் நினைக்கிறேன்”
“அதாவது பந்தை பவுலர் வீசியதும் இது ஃபுல்லர் பந்தாக இருக்கும் என்பதால் அதை அடியுங்கள் என்று உங்களுடைய மனம் சொல்லும். ஆனால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு செல்லும் வீரர்கள் ஃபுல்லர் பந்துகளுக்கு எதிராக சாதாரண பயிற்சியிலேயே மாற்றத்தை செய்வார்கள். குறிப்பாக புதிய பந்துகளை கடினமாக அடிக்காமல் மெதுவாக அடிப்பார்கள்”
“அத்துடன் உடலுக்கு நெருக்கமாக பந்தை அடிக்க முயற்சிப்பார்கள் அல்லது அடிக்காமல் விடப் பார்ப்பார்கள். 3வது இடத்தில் நீண்ட காலமாக விளையாடி வரும் சுப்மன் கில் மிகவும் சுமாரான ஷாட்டுகளை விளையாடுகிறார் என்று சொல்வதில் எந்த தயக்கமும் இல்லை. சொல்லப்போனால் மொத்த இந்திய பேட்டிங் துறையும் சில காலமாக நன்றாக விளையாடவில்லை”
இதையும் படிங்க: அஸ்வின் போனதால் இப்போ அதுவும் பலவீனமாகிடுச்சு.. இந்திய அணி பற்றி புஜாரா கவலை பேட்டி
“அவர்கள் தங்களுக்குத் தாங்களே அழுத்தத்தை போட்டுக் கொள்கிறார்கள். சுப்மன் கில் இந்தியாவில் விளையாடுகிறோம் என்று நினைத்துக் கொண்டு பவுலர் பந்தை கையிலிருந்து விட்டதும் அதை கடினமாக அடிக்க செல்கிறார். ஆனால் ஆஸ்திரேலியாவில் காபா போன்ற மைதானத்தில் ஸ்கொயர் ஆஃப் தி விக்கெட் திசையில் விளையாடுவதை விட ஃபிரண்ட்டில் விளையாடுவது எளிது. எனவே ஆஸ்திரேலியாவில் ஆட்டத்தின் துவக்கத்தில் “சரி நாம் இப்போது பந்தை தவற விடுவோம்” என்று சொல்லிக்கொண்டு விளையாட வேண்டும்” எனக் கூறினார்.