- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஸ்ரேயாஸ் ஐயரை 2026இல் கழற்றி விடத் தான்.. இப்போவே கம்பீர் டாப் 5ல கூட சேர்க்காம விட்ருக்காரு.. டிகே விளாசல்

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் ஒன்பதாம் தேதி ஐக்கிய அரபு நாடுகளில் துவங்கியது. அத்தொடரில் விளையாடுவதற்காக அறிவிக்கப்பட்ட சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் கழற்றி விடப்பட்டது ரசிகர்களை கோபமடைய வைத்தது. ஏனெனில் 2024 ஐபிஎல் கோப்பையை கேப்டனாக வென்ற அவர் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் அதிக ரன்கள் குவித்து இந்தியா கோப்பையை வெல்ல உதவினர்.

அதே வேகத்தில் 2025 ஐபிஎல் தொடரில் 604 ரன்களை 175 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்த அவர் பஞ்சாப்பை 11 வருடங்கள் கழித்து ஃபைனல் அழைத்துச் சென்றார். ஆனால் அப்படிப்பட்ட அவருக்கு ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட இடம் கொடுக்கவில்லை. குறிப்பாக சுப்மன் கில்லை வருங்கால கேப்டனாக வளர்க்க நினைக்கும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அவரை கழற்றி விட்டுள்ளார்.

- Advertisement -

2026க்காக இப்போதே:

இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயரை 2026 டி20 உலகக் கோப்பையிலிருந்து கழற்றி விடுவதற்காகவே இப்போதே கௌதம் கம்பீர் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட சேர்க்கவில்லை என்று தினேஷ் கார்த்திக் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஒரு வீரரால் செய்யக்கூடிய அனைத்தையும் ஸ்ரேயாஸ் செய்துள்ளார் என்பதை ஒருபுறம் வையுங்கள். கௌதம் கம்பீர் பயிற்சியாளராக வந்ததிலிருந்து இந்தியா 20 டி20 போட்டிகளில் விளையாடி 17 வெற்றிகள் பெற்றுள்ளது”

“எனவே ஒரு பயிற்சியாளராக தமக்கு வெற்றிகளைக் கொடுத்த வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிப்பதற்காக அவர் சில வீரர்களை கழற்றி விட்டு கடினமான முடிவுகளை எடுப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆசியக் கோப்பை அறிவித்த பின் அவர்கள் ரிசர்வ் வீரர்கள் பட்டியலையும் வெளியிட்டார்கள். ஆனால் அந்தப் பட்டியலில் கூட ஸ்ரேயாஸ் இல்லாதது எனக்கு சரியாகப்படவில்லை”

- Advertisement -

கார்த்திக் விமர்சனம்:

“அது உலகக் கோப்பை உட்பட வருங்கால தொடர்களில் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட மாட்டீர்கள் என்பதற்கான சமிக்கையாகும். அடுத்த டி20 உலகக் கோப்பைக்கு முன் ஆசியக் கோப்பைக்கு பின் இந்தியா சில இருதரப்பு தொடர்களில் விளையாட உள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் டாப் 5 ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட ஸ்ரேயாஸ் இல்லாதது எனக்கு நியாயமாகத் தோன்றவில்லை”

இதையும் படிங்க: இந்தியா ஸ்ட்ராங்கான டீம் தான்.. ஆனா டி20யில் இதை செஞ்சா பாகிஸ்தான் ஜெய்க்கலாம்.. உமர் குல் பேட்டி

“டி20 உலகக் கோப்பையை முன்னோக்கிய பயணத்தில் அவரும் அங்கமாக இருந்திருக்க வேண்டும். அந்த உலகக் கோப்பையில் அவர் இருப்பார் என்று நான் உண்மையாக நம்புகிறேன். ஏனெனில் அவர் அதற்குத் தகுதியானவர்” என்று கூறினார். அத்துடன் இங்கிருந்து உள்ளூர், ஐபிஎல் மற்றும் சர்வதேச அளவில் தொடர்ந்து அசத்தினால் ஸ்ரேயாஸ் ஐயரை டி20 உலகக் கோப்பை உட்பட எந்த ஃபார்மட்டிலும் யாராலும் கழற்றி விட முடியாது என்றும் கார்த்திக் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -