- Advertisement -

தினேஷ் கார்த்திக் பினிஷெர் கிடையாது, அவரின் வேலைக்கு பெயரே வேற – முன்னாள் தமிழக வீரரின் கருத்தால் ரசிகர்கள் அதிருப்தி

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் 3 போட்டிகளின் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இந்த தொடரில் ட்ரினிடாட் நடைபெற்ற முதல் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா 64 (44) ரன்கள் அடித்த போதிலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் தடுமாறிய இந்தியாவுக்கு கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக 41* (19) ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்த தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

கடந்த 2004 முதல் இந்தியாவுக்காக விளையாடி வரும் இவருக்கு அதே சமயத்தில் அறிமுகமாகி உலக கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன் எம்எஸ் தோனி கீப்பராக இருந்ததால் தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கடைசியாக கடந்த 2019 உலக கோப்பையில் விளையாடிய அவர் அதன்பின் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் முடிந்தளவு சிறப்பாக செயல்பட்ட போதிலும் தேர்வுக்குழு கண்டுகொள்ளாத நிலையில் ஒரு கட்டத்தில் வர்ணனையாளராக அவதரித்த அவரின் இந்திய கேரியர் முடிந்ததாக அனைவரும் நினைத்தனர்.

- Advertisement -

ஆனால் டி20 கிரிக்கெட்டில் இன்னும் தம்மால் சாதிக்க முடியும் என்று நினைத்த தினேஷ் கார்த்திக் அக்டோபரில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் இந்தியாவுக்கு கோப்பையை வெல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் அதற்காக கடினமாக உழைத்து ஐபிஎல் 2022 தொடரில் பெங்களூரு அணிக்காக லோயர் மிடில் ஆர்டரில் அசத்தலாக பேட்டிங் செய்தார். குறிப்பாக 330 ரன்களை 183.33 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் குவித்து அதற்காக “சூப்பர் ஸ்ட்ரைக்கர்” எனும் விருதையும் வென்ற அவர் 3 – 4 வெற்றிகளை தனி ஒருவனாக பெற்றுக்கொடுத்து சிறந்த பினிஷராக நிரூபித்தார்.

பினிஷர் டிகே:
அதனால் 3 வருடங்கள் கழித்து இந்திய அணிக்குள் கம்பேக் கொடுத்த அவர் தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் 2 – 3 போட்டிகளில் இந்தியா தடுமாறியபோது கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக பேட்டிங் செய்து வெற்றிக்காக பங்காற்றினார். குறிப்பாக ராஜ்கோட் நகரில் நடந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய அவர் அரைசதம் அடித்து இந்தியாவுக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்து ஆட்ட நாயகன் விருது வென்றார். அதேபோல் தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் அசத்தி வரும் அவர் 37 வயதுக்குப் பின் 2 ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற ஒரே இந்திய வீரர் என்ற சாதனையை படைத்து வருகிறார்.

- Advertisement -

37 வயதிலும் அட்டகாசமாக செயல்பட்டு வரும் அவருக்கு கேப்டன் ரோகித் சர்மா பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆதரவு இருப்பதால் வரும் அக்டோபரில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விளையாட அதிக வாய்ப்புள்ளது. மேலும் தோனி என்பவரின் பெரிய கேரியரை தாண்டி இன்னும் விளையாடும் தினேஷ் கார்த்திக் கடைசி 4 ஓவர்களில் அற்புதமாக விளையாடக்கூடிய ஸ்பெஷலிஸ்ட் பினிஷராக திகழ்கிறார் என்று அஜய் ஜடேஜா உள்ளிட்ட நிறைய முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர்.

பினிஷர் கிடையாது:
இந்நிலையில் கடைசி ஒருசில ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்றுக் கொடுக்கும் தினேஷ் கார்த்திக் பினிஷர் கிடையாது என்று தெரிவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் 8 – 9 ஓவர்களில் களமிறங்கிப் நங்கூரமாக நின்று போட்டியை கடைசி வரை எடுத்துச் சென்று வெற்றியை பெற்று கொடுப்பவரே பினிஷர் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “பினிஷர் என்பதற்கான அர்த்தம் தவறானது. ஐபிஎல் தொடரிலும் இங்கேயும் தினேஷ் கார்த்திக் சிறப்பாகவே செயல்படுகிறார். ஆனால் அவர் பினிஷர் கிடையாது. 8 அல்லது 9-வது ஓவரில் களமிறங்கி கடைசி வரை பேட்டிங் செய்து வெற்றி பெற்று கொடுப்பவரே பினிஷர். எனவே தினேஷ் கார்த்திக் செய்வதை பைனல் டச் என்று கூறலாம்”

“இங்கிலாந்துக்கு எதிராக தனி ஒருவனாக வெற்றியின் விளிம்பு வரை அழைத்து வந்த சூரியகுமார் யாதவை பாருங்கள். அதேபோல் ஒருநாள் தொடரில் ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் ஆகியோர் மிடில் ஆர்டரில் களமிறங்கி கடைசி வரை நின்று வெற்றி பெற வைத்ததே பினிஷருக்கு அடையாளம். மேலும் தொடக்க வீரராக களமிறங்கும் கேப்டன் ரோகித் சர்மா 17 ஓவர்கள் வரை விளையாடினால் அதுவும் பினிஷர் வேலையாகும்”

- Advertisement -

“உண்மையான பினிஷர் 16 – 20 ஓவர்களில் விளையாட மாட்டார்கள். 8 – 9வது ஓவரிலிருந்து 60+ ரன்களை எடுப்பவர்களே பினிஷர்கள். எனவே தினேஷ் கார்த்திக்கின் வேலையின் பெயர் பினிஷெர் கிடையாது.

இதையும் படிங்க: காமன்வெல்த் கேம்ஸ் 2022 : பார்படாஸை அதிரவிட்ட சிங்கப்பெண் சாதனை, நாக்-அவுட் சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்றதன் முழுவிவரம்

கடைசி நேரத்தில் அவர் சிறப்பாக செயல்பட்டாலும் பினிசிங் வேலையை முடிப்பவரே தவிர பினிஷர் கிடையாது” என்று கூறினார். ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் தமிழகத்திலிருந்து சிறப்பாக செயல்படும் தினேஷ் கார்த்திக்கை பினிஷர் கிடையாது என்று கூறுவதுடன் அதற்காக புதிய அர்த்தம் சொல்வது தமிழக ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -