ஆசிய கோப்பை 2022 : நல்ல வர்ணனையாளரான தினேஷ் கார்த்திக்கை நான் செலக்ட் பண்ணிருக்க மாட்டேன் – முன்னாள் வீரர் அதிருப்தி

DInesh Karthik Commentrator
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு அடுத்ததாக ஜிம்பாப்வேக்கு எதிராக ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. அதை தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி துபாயில் துவங்கும் வரலாற்றின் 15வது ஆசிய கோப்பையில் இந்தியா களமிறங்க உள்ளது. அதற்காக கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. அதில் காயத்திலிருந்து குணமடைந்துள்ள கேஎல் ராகுல் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சேர்க்கப்பட்டுள்ளார்.

Axar Patel

- Advertisement -

அவர்களுடன் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அசத்திய சூர்யகுமார் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஸ்வர் குமார், ரவீந்திர ஜடேஜா போன்ற சீனியர்களுக்கும் தீபக் ஹூடா, ரவி பிஷ்னோய், அரஷ்தீப் சிங் ஆகிய இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இஷான் கிசான் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் சமீபத்திய தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து டி20 தொடர்களில் அசத்தலாக செயல்பட்ட போதிலும் வாய்ப்பு கிடைக்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. மேலும் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் காயத்தால் வெளியேறியுள்ளது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

அணியில் டிகே:
இந்த அணியில் தமிழகத்தைச் சேர்ந்த சீனியர் வீரர் தினேஷ் கார்த்திக் இடம் பிடித்து அசத்தியுள்ளார். கடைசியாக கடந்த 2019 உலக கோப்பையில் விளையாடிய அவர் ஒரு கட்டத்தில் வர்ணனையாளராக மாறியதால் அவரின் இந்திய கேரியர் முடிந்து விட்டதாக அனைவரும் நினைத்தனர். ஆனால் டி20 கிரிக்கெட்டில் தம்மால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் கடுமையாக உழைத்து ஐபிஎல் 2022 தொடரில் பெங்களூரு அணிக்காக மிடில் ஆர்டரில் மிரட்டலாக பேட்டிங் செய்த அவர் 330 ரன்களை 183.33 என்று அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் விளாசி 3 – 4 வெற்றிகளை தனி ஒருவனாக பெற்றுக் கொடுத்து தன்னை மிகச்சிறந்த பினிஷராக நிரூபித்தார்.

Dinesh Karthik

அதனால் 3 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்த அவர் அதன்பின் நடந்த தென் ஆப்பிரிக்கா டி20 தொடர் முழுவதும் அசத்தலாக செயல்பட்ட நிலையில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து டி20 தொடரில் சுமாராக செயல்பட்டார். இருப்பினும் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் முதல் போட்டியில் 41* ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்த அவர் 37 வயதுக்குப் பின் 2 ஆட்ட நாயகன் விருதுகளையும் அதிக ரன்களைக் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையுடன் முடிந்தளவுக்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

ஜடேஜா கேள்வி:
அதன் காரணமாகவே இந்த ஆசிய கோப்பையிலும் தேர்வு செய்யப்பட்டுள்ள அவருக்கு டி20 உலக கோப்பையிலும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ரிஷப் பண்ட், கேஎல் ராகுல் போன்ற விக்கெட் கீப்பிங் செய்யும் இளம் வீரர்களுக்கு மத்தியில் வெறும் பினிஷிங் செய்வதற்காக மட்டும் தினேஷ் கார்த்திக்க்கு எதற்காக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற கருத்துக்களும் அந்த வேலையை சூர்யகுமார், ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா போன்றவர்களும் செய்வார்களே என்ற கருத்துக்களும் பரவலாக காணப்படுகிறது. இந்நிலையில் ஒரு மிகச்சிறந்த வர்ணனையாளரான தினேஷ் கார்த்திக் தம்முடைய அணியில் தேர்வு செய்ய மாட்டேன் என்று முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்.

Ajay

ஆசிய கோப்பையில் தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டது குறித்து அவர் சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “இந்திய அணி அதிரடி பாதையில் விளையாடப் போவதாக சமீபத்தில் நான் கேள்விப்பட்டேன். ஆனால் அதற்கு நீங்கள் சற்று வித்தியாசமாக தேர்வு செய்ய வேண்டும். விராட் கோலியும் ரோகித் சர்மாயும் களமிறங்கினால் உங்களுக்கு தினேஷ் கார்த்திக் தேவை. அவர் உங்களது முக்கிய வீரர். ஆனால் அவர்கள் இருவரில் ஒருவர் இல்லையென்றால் தினேஷ் கார்த்திக்க்கு இங்கு வேலையில்லை. அதனால் நான் கார்த்திக்கை என்னுடைய அணியில் தேர்வு செய்ய மாட்டேன். மாறாக ஒரு வர்ணனையாளராக எனது அருகில் தேர்வு செய்வேன். அவர் மிகச்சிறந்த வர்ணனையாளர். ஆனால் அவரை என்னுடைய அணியில் நான் தேர்வு செய்ய மாட்டேன்” என்று கூறினார்.

அத்துடன் முகமது ஷமி இந்த அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து அஜய் ஜடேஜா பேசியது பின்வருமாறு. “நான் முதலில் பவுலர்களை தேர்வு செய்வேன் என்பதால் என்னுடைய அணியில் அரஷ்தீப், பும்ரா, சஹால் ஆகியோருடன் ஷமியை சேர்த்திருப்பேன். அவர்கள் நால்வரும் முக்கியமானவர்கள். பேட்டிங்கில் ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் மற்றும் தீபக் ஹூடா முக்கியமானவர்கள்” என்று கூறினார்.

Advertisement