என்னை ஏன் டி20 அணியில் இருந்து தூக்கினார்கள் என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் அணிக்கு – சீனியர் வீரர் நம்பிக்கை

Raina
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக தனது 18 வயதில் அறிமுகமானவர் தினேஷ் கார்த்திக். ஆரம்ப காலத்தில் இருந்து இந்திய அணியில் நிரந்தர இடம் இல்லாமல் தவித்து வந்தாலும் அவ்வப்போது இந்திய அணிக்கு வந்து வந்து செல்லும் வீரராக தினேஷ் கார்த்திக் திகழ்கிறார். சொல்லப்போனால் கிட்டத்தட்ட 2 தலைமுறை வீரர்களுடனும் இவர் கிரிக்கெட் விளையாடி உள்ளார் என்றே கூறலாம்.

karthik3

- Advertisement -

கடைசியாக இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் இந்திய அணியிலும் இவர் விளையாடியது குறிப்பிடத்தக்கது. தோனியுடன் இருந்த போட்டியின் காரணமாக இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் போனவர். ஆனாலும் இன்று வரை அவ்வோப்போது திடீரென அணிக்கு சில காலம் விளையாடி காணாமல் போய்விடுவார். வெளியில் தெரியாமல் போன ஒரு உண்மையான திறமை வாய்ந்த வீரர் என்றே இவரை கூறலாம்.

இப்படி உள்ளே வெளியே என அவ்வப்போது பெரிய தொடர்களில் ஆடிக்கொண்டிக்கும் தினேஷ் கார்த்திக் மனம் தளராமல் உள்ளூர் போட்டிகளில் தொடர்ச்சியாக நன்றாக ஆடி சாம்பியன்ஸ் கோப்பை 2013, 2017 ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் கோப்பை, 2019 நடந்த உலக கோப்பை என அனைத்திலும் இந்திய அணிக்குள் நுழைந்தார்.

Karthik

இப்படி விடாமுயற்சியுடன் ஆடிக் கொண்டிருந்த அவர் கடந்த 2019 உலக கோப்பை தொடரின் போது முக்கியமான போட்டி ஒன்றில் கடுமையாக சொதப்பினார். இதன் காரணமாக அதன் பின்னர் நடந்த தொடர்களில் அவர் அணியில் இடம்பெறவில்லை. இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடர் குறித்து பேசிய தினேஷ் கார்த்திக் கூறுகையில் :

- Advertisement -

டி20 கிரிக்கெட்டில் எனது புள்ளிவிவரங்கள் மிகச் சிறப்பாக உள்ளது. ஒரு நாள் உலக கோப்பை தொடரில் என்னால் எனது திட்டத்தை சரியாக செயல்படுத்த முடியாமல் போய்விட்டது. ஒரு நாள் போட்டிக்கான அணியில் இருந்து என்னை நீக்கியதன் அர்த்தத்தை என்னால் புரிந்து கொள்ள முடியும். ஆனால், டி20 போட்டியில் இருந்து ஏன் நீக்கினார்கள் என்று தெரியவில்லை.

Karthik

தற்போதும் கூட என்னால் டி20 அணிக்கு திரும்ப முடியும். சமீபத்தில் நடந்த உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடியுள்ளேன். இதனால் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவேன் என்று கூறியுள்ளார் தினேஷ் கார்த்திக்.

Advertisement