இதை மறுக்க முடியுமா? எப்போதுமே வில்லியம்சன், ஸ்மித், ரூட்டை விட விராட் கோலி தான் கிரிக்கெட்டின் கிங் – டிகே சொல்லும் காரணம் என்ன

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா ட்ரினிடாட் நகரில் நடைபெற்று வரும் 2வது போட்டியிலும் முதலில் பேட்டிங் செய்து 438 ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தை பெற்றுள்ளது. ஜூலை 20ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் அதிகபட்சமாக இந்தியாவுக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சதமடித்த 121 ரன்கள் எடுக்க வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ஜோமேல் வேரிக்கன், கிமர் ரோச் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

Kohli-1

- Advertisement -

அதை தொடர்ந்து விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிரைக் ப்ரத்வெய்ட் 75 ரன்கள் எடுத்த உதவியுடன் 3வது நாள் முடிவில் 229/5 ரன்கள் எடுத்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. முன்னதாக இப்போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் 500 போட்டிகளில் விளையாடிய 4வது இந்தியர் என்ற சாதனை படைத்த விராட் கோலி உலகிலேயே தன்னுடைய 500வது போட்டியில் அரை சதம் மற்றும் சதமடித்த முதல் வீரர் என்ற இரட்டை உலக சாதனையும் 500 போட்டிகளில் முடிவில் அதிக ரன்கள் மற்றும் சதங்கள் அடித்த வீரர்கள் ஆகிய இரட்டை சரித்திரங்களையும் படைத்தார்.

டிகே பாராட்டு:
கடந்த 2008 அண்டர்-19 உலக கோப்பையை கேப்டனாக வென்று சர்வதேச அரங்கில் அறிமுகமான அவர் 2011 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி உலகின் அனைத்து இடங்களிலும் அனைத்து பவுலர்களையும் சிறப்பாக எதிர்கொண்டு 25000க்கும் மேற்பட்ட ரன்களையும் 75 சதங்களையும் அடித்து நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார். இருப்பினும் ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன், ஜோ ரூட் ஆகியோருடன் நவீன டெஸ்ட் கிரிக்கெட்டின் 4 மகத்தான வீரர்களில் ஒருவராக போற்றப்படும் அவருடைய பேட்டிங் சராசரி 2019க்குப்பின் சுமாராக செயல்பட்டதால் 50க்கும் கீழே சரிந்துள்ளது.

Steve Smith Virat Kohli IND vs AUS

குறிப்பாக விராட் கோலியை விட தற்போது ரூட் மற்றும் ஸ்மித் ஆகியோர் அதிக டெஸ்ட் சதங்கள் அடித்துள்ளதால் ஃபேப் 4 வீரர்களில் தற்போது அவர் ஒருவராக இல்லை என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சமீபத்தில் வெளிப்படையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆகிய 2 வகையான கிரிக்கெட்டில் மட்டும் அசத்தும் நிலையில் விராட் கோலி மட்டுமே 3 விதமான கிரிக்கெட்டிலும் தன்னை உட்படுத்தி மிகச்சிறப்பாக செயல்படுவதாக தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் ஃபேப் 4 என்பதையும் தாண்டி அனைத்து விதமான கிரிக்கெட்டின் கிங் போல விராட் கோலி மட்டுமே அசத்தி வருவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி 3 விதமான கிரிக்கெட்டில் விளையாடுவது அவருடைய உடலில் அதிக பாரத்தை ஏற்படுத்தும். மறுபுறம் ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித் போன்றவர்கள் ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய 2 விதமான கிரிக்கெட்டில் மட்டுமே அதிகமாக விளையாடுகின்றனர். மேலும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் நிறைய தருணங்களில் இந்தியாவை விட அதிகமான டெஸ்ட் போட்டியில் விளையாடுகின்றன”

Dinesh-Karthik-1

இதையும் படிங்க:10 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துகொண்ட எய்டன் மார்க்ரம் – அவரது மனைவி நிக்கோல் யார் தெரியுமா?

“அதனால் விராட் கோலியை விட அவர்கள் அதிக சதங்கள் அடிப்பதில் எந்த ஆச்சரியமில்லை. எனவே பல்வேறு நாடுகளிலும் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் காட்டும் ஒழுக்கத்தின் அடிப்படையில் ஃபேப் 4 இல்லாவிட்டாலும் விராட் கோலியால் உலகிலேயே அதிக டெஸ்ட் சதங்களை அடித்த வீரராக தன்னுடைய கேரியரை ஃபினிஷிங் செய்ய முடியும். கடந்த 2 வருடங்கள் அவருக்கு சிறப்பாக அமையவில்லை என்றாலும் தற்போது 29 டெஸ்ட் சதங்களை அவர் அடித்துள்ளது இன்றைய நாளின் பெரிய கதையாகும்” என்று கூறினார். அவர் கூறுவது போல ஜோ ரூட் போன்றவர்களை காட்டிலும் விராட் கோலி மட்டுமே 3 வகையான கிரிக்கெட்டிலும் கிட்டத்தட்ட 50 என்ற பேட்டிங் சராசரியை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement