10 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துகொண்ட எய்டன் மார்க்ரம் – அவரது மனைவி நிக்கோல் யார் தெரியுமா?

Aiden-Markram-and-Nicole
- Advertisement -

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியைச் சேர்ந்த இளம் வலது கை ஆட்டக்காரரான எய்டன் மார்க்ரம் கடந்த 2017-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்காக அறிமுகமாகி இதுவரை 35 டெஸ்ட் போட்டிகள், 50 ஒருநாள் போட்டிகள் மற்றும் 34 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 4500 ரன்களுக்கு மேல் குவித்துள்ள இவர் தற்போது தென் ஆப்பிரிக்க அணியின் டி20 கேப்டனாகவும் திகழ்ந்து வருகிறார்.

அதுமட்டும் இன்றி ஐபிஎல் தொடரில் 2021-ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் அவர் இதுவரை 33 போட்டிகளில் விளையாடி உள்ளார். ஆரம்பத்தில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்த இவர் தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

28 வயதான எய்டன் மார்க்ரம் சர்வதேச கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்க அணிக்காக தற்போது மிடில் ஆர்டரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வரும் வேளையில் அவர் 10 ஆண்டுகளாக காதலித்து தற்போது ஜூலை 22-ஆம் தேதி நேற்று தனது காதலி நிக்கோல் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அவரது இந்த திருமணத்திற்கு பிறகு பல்வேறு பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மார்க்ரம் திருமணம் செய்து கொண்டுள்ள நிக்கோல் யார்? என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி இந்த தம்பதிக்கு வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் மார்க்கம் மற்றும் அவரது நீண்டநாள் தோழியான நிக்கோல் ஆகிய இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வருகின்றனர். மார்க்ரம் 18 வயதிலிருந்து நிக்கோலை காதலித்து வருவதாகவும் கடந்த சில ஆண்டுகளாகவே டேட்டிங் செய்து வந்த அவர்கள் 2022-ஆம் ஆண்டு திருமணம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டிருந்தனர்.

இதையும் படிங்க : வீடியோ : உங்களுக்கு இவ்ளோ திமிர் ஆகாது, வெளியேறிய வங்கதேச கேப்டன் – அவமானப்படுத்திய ஹர்மன்ப்ரீத் மீது இந்திய ரசிகர்களே கோபம்

வேளையில் தற்போது ஓராண்டு கழித்து திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இதுகுறித்த புகைப்படங்களையும் எய்டன் மார்க்கரம் மற்றும் நிக்கோல் ஆகிய இருவரும் இணைந்து தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement