IND vs RSA : 16 வருட மேஜிக் ! வயதானலும் ஸ்டைல் மாறாமல் சச்சினுக்கு பின் நம்ம டிகே சூப்பர் சாதனை

Dinesh Karthik vs RSA
- Advertisement -

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக தனது சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் முதல் 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா முன்னிலை வகித்ததால் கோப்பையை வெல்ல வென்றே தீரவேண்டும் என்ற நிலைமையில் ஜூன் 17இல் குஜராத்தின் ராஜ்கோட் நகரில் நடைபெற்ற 4-வது போட்டியில் இந்தியா களமிறங்கியது. அதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 20 ஓவர்களில் கடும் போராட்டத்திற்குப் பின் 169/6 ரன்கள் சேர்த்தது.

ருதுராஜ் கைக்வாட் 5 (7) ஷ்ரேயஸ் ஐயர் 4 (2) இஷான் கிசான் 27 (26) என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றியதால் 40/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய இந்தியாவை காப்பாற்ற முயன்ற கேப்டன் ரிஷப் பண்ட் வழக்கம்போல 17 (23) ரன்களில் அவுட்டாகி சொதப்பினார். அதனால் 13 ஓவரில் 81/4 என தடுமாறிய இந்தியா இந்த முக்கிய போட்டியில் 150 ரன்களை கூட தாண்டாது போல என்று கவலையடைந்த ரசிகர்களுக்கு இக்கட்டான நேரத்தில் ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியா – தினேஷ் கார்த்திக் ஆகியோர் நிதானமாகவும் அதிரடியாக ரன்களை சேர்த்தனர்.

- Advertisement -

காப்பாற்றிய டிகே:
ஐபிஎல் 2022 தொடரில் அட்டகாசமாக செயல்பட்டு அற்புதமான பார்மில் இருக்கும் இவர்கள் 15 ஓவர்களுக்கு பின் தென் ஆப்பிரிக்க பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு 5-வது விக்கெட்டுக்கு முக்கியமான 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை மீட்டெடுத்தனர். அதில் ஹர்டிக் பாண்டியா 3 பவுண்டரி 3 சிக்சருடன் 46 (31) ரன்கள் விளாசி ஆட்டமிழக்க மறுபுறம் அட்டகாசமாக பேட்டிங் செய்த தினேஷ் கார்த்திக் 9 பவுண்டரி 2 சிக்சருடன் 55 (27) ரன்கள் எடுத்து சூப்பரான பினிஷிங் கொடுத்து ஆட்டமிழந்தார். தென் ஆப்ரிக்கா சார்பில் அதிகபட்சமாக லுங்கி நிகிடி 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதை தொடர்ந்து 170 என்ற இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்காவை ஆரம்பம் முதலே அபாரமாக பந்துவீசிய இந்தியா பெரிய ரன்களை எடுக்க விடாமல் மடக்கிப் பிடித்து. அதில் முதலாவதாக குயின்டன் டி காக் 14 (13) ரன்களில் ரன் அவுட்டாக அவருடன் களமிறங்கிய கேப்டன் பவுமா டைவ் அடிக்கும் போது காயமடைந்ததால் 8 (11) ரன்களில் ரிட்டயர்ட் ஹர்ட்டானார்.

- Advertisement -

அந்த சமயத்தில் வந்த பிரிடோரியஸ் 0 (6) டேவிட் மில்லர் 9 (7) ஹென்றிச் க்ளாஸென் 8 (8) வேன் டெர் டுஷன் 20 (20) என கடந்த போட்டிகளில் அச்சுறுத்தலை கொடுத்த பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் இந்திய பவுலர்கள் காலி செய்தனர். இறுதியில் 16.5 ஓவர்களில் 87/9 ரன்களை எடுத்த தென் ஆப்பிரிக்காவுக்கு பவுமா பேட்டிங் செய்ய வராததால் 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 2 – 2* என்ற கணக்கில் தொடரை சமன் செய்து சொந்த மண்ணில் அவ்வளவு சுலபமாக தோற்க மாட்டோம் என்ற வகையில் பதிலடி கொடுத்தது.

16 வருட மேஜிக்:
இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகளையும் சஹால் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். இந்த வெற்றிக்கு முக்கியமான நேரத்தில் 55 ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். கடந்த 2004இல் இந்தியாவுக்காக அறிமுகமான இவர் கடந்த 2006 டிசம்பர் 1இல் இதே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வீரேந்திர சேவாக் தலைமையில் இந்தியா களமிறங்கிய தனது வரலாற்றின் முதல் டி20 போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 127 ரன்கள் இலக்கைத் துரத்தும் போது 31* (28) ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்றார். அதனால் டி20 போட்டிகளில் ஆட்ட நாயகன் விருதை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார்.

- Advertisement -

இருப்பினும் அதே காலகட்டத்தில் விக்கெட் கீப்பராக அறிமுகமாகி கேப்டனாக விஸ்வரூபம் எடுத்து நிரந்தர இடம் பிடித்த எம்எஸ் தோனி இருந்ததால் இவருக்கு இளமை காலத்தில் தொடர்ச்சியான வாய்ப்பு கிடைக்காமலேயே போனது. ஆனாலும் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு வரும் இவர் இடையிடையே இந்திய அணியில் கம்பேக் கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது அதே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 16 வருடங்கள் கழித்து தனது முதல் அரை சதத்தை பதிவு செய்துள்ள அவர் 16 வருடங்கள் கழித்து ஆட்ட நாயகன் விருதை வென்று மேஜிக் நிகழ்த்தியுள்ளார் என்றே கூறலாம்.

சச்சினுக்கு பின்:
முன்னதாக தனது 19 வயதில் இந்தியாவுக்காக அறிமுகமாகி அந்த வயதிலேயே அரைசதம் அடித்த அவர் தற்போது 37 வயதை தொட்ட பின்பும் சாதிக்க வயது தடையில்லை என்பது போல் அரைசதம் அடித்து இந்தியாவுக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக இதுபோல 20 வயதிற்கு முன்பும் 37வயதிற்குப் பின்பும் அரைசதம் அடித்த ஒரே இந்திய வீரர் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஆவார்.

இதையும் படிங்க : IND vs RSA : எங்களையா அடிச்சீங்க ! தெ.ஆ’வை பழி தீர்த்து வரலாற்று தோல்வியை பரிசளித்த இந்தியா – மாஸ் கம் பேக்

தற்போது அவருக்கு பின்பு அந்தப் பெருமையைப் பெறும் 2-வது இந்தியராக தினேஷ் கார்த்திக் சாதித்துள்ளது தமிழக ரசிகர்களுக்கு பெருமையான அம்சமாகும்.

Advertisement