IND vs RSA : எங்களையா அடிச்சீங்க ! தெ.ஆ’வை பழி தீர்த்து வரலாற்று தோல்வியை பரிசளித்த இந்தியா – மாஸ் கம் பேக்

Harshal Patel David Miller IND vs RSA
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்கா பங்கேற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா முன்னிலை வகித்த நிலையில் ஜூன் 17இல் குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் நடந்த 4-வது போட்டியில் நிச்சயம் வென்றே தீரவேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் இந்தியா களமிறங்கியது. அதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா போராடி 169/6 ரன்கள் சேர்த்தது.

Dinesh Karthik and Hardik Pandya

- Advertisement -

இந்தியாவுக்கு ருதுராஜ் கைக்வாட் 5 (7) ஷ்ரேயஸ் ஐயர் 4 (2) இஷான் கிசான் 27 (16) என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்த நிலையில் பொறுப்புடன் பேட்டிங் செய்ய வேண்டிய கேப்டன் ரிஷப் பண்ட் வழக்கம்போல 17 (23) ரன்களில் அவுட்டாகி சொதப்பினார். அதனால் 13 ஓவர்களில் 81/4 என திணறிய இந்தியா 150 ரன்களை தாண்டாது என்று ரசிகர்கள் கவலையடைந்த நேரத்தில் ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் நிதானமாகவும் அதிரடியாக ரன்களை சேர்த்தனர்.

5-வது விக்கெட்டுக்கு முக்கியமான 67 ரன்களை சேர்த்த இந்த ஜோடியில் 3 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 46 (31) ரன்கள் எடுத்த ஹர்திக் பாண்டியா கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுபுறம் 9 பவுண்டரி 2 சிக்சருடன் 55 (27) ரன்களை தெறிக்கவிட்ட தினேஷ் கார்த்திக் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்து இந்தியாவுக்கு சூப்பர் பினிஷிங் கொடுத்தார். தென் ஆப்ரிக்கா சார்பில் அதிகபட்சமாக லுங்கி நிகிடி 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

Dinesh Karthik vs RSA

இந்தியா அபாரம்:
அதை தொடர்ந்து 170 என்ற இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்காவுக்கு முதல் ஓவரிலிருந்தே துல்லியமாக பந்துவீசிய இந்தியா கடும் நெருக்கடி கொடுத்தது. அதனால் 14 (13) ரன்களில் தொடக்க வீரர் குயின்டன் டி காக் ரன் அவுட்டாக அவருடன் களமிறங்கிய கேப்டன் தெம்பா பவுமா டைவ் அடிக்கும் போது காயமடைந்ததால் 8 (11) ரன்களில் ரிட்டையர் ஹார்ட்டாகி சென்றார். அந்த சமயத்தில் வந்த பிரிடோரியஸ் 0 (6) ஹென்றிச் க்ளாஸென் 8 (8) டேவிட் மில்லர் 9 (7) வேன் டெர் டுஷன் 20 (20) என கடந்த போட்டிகளில் அச்சுறுத்தலை கொடுத்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கிய இந்தியா அபாரமாக பந்து வீசியது.

- Advertisement -

இறுதியில் 16.5 ஓவர்களில் 87/9 ரன்கள் எடுத்திருந்த போது பவுமா பேட்டிங் செய்ய வராததால் 82 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற இந்தியா 2 – 2* என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக அவேஷ் கான் 4 விக்கெட்களையும் சஹால் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். இந்த வெற்றிக்கு 55 ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இதை தொடர்ந்து ஜூன் 19இல் நடைபெறும் கடைசி போட்டியில் வென்றால் கோப்பையை வெல்லலாம் என்ற நல்ல நிலைமைக்கு இந்தியா போராடி வந்துள்ளது.

IND vs RSA Pant Chahal

எங்களையா அடிச்சீங்க:
ஏனெனில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா போன்ற முக்கிய வீரர்கள் ஓய்வெடுக்கும் இந்த தொடரில் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ரிஷப் பண்ட் தலைமையிலான இந்தியாவை முதல் 2 போட்டிகளில் அசால்ட்டாக சேசிங் செய்த தென்ஆப்பிரிக்கா அடுத்தடுத்து தோல்விகளை பரிசளித்தது. அதுவும் டி20 உலககோப்பை 2021 தொடரிலிருந்துக்கு சொந்த மண்ணில் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக கடைசியாக பங்கேற்ற 12 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று உலக சாதனை படைத்து இந்தியா போட்டு வந்த வெற்றி நடைக்கு முற்றுப்புள்ளி வைத்து சொந்த மண்ணில் மண்ணை கவ்வ வைத்த தென் ஆப்பிரிக்கா வரலாற்று தோல்வியை பரிசளித்தது.

- Advertisement -

அதனால் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் தலைக்குனிவுக்கு உள்ளான இந்திய அணியினர் மனம் தளராமல் அடுத்த 2 போட்டிகளில் அபாரமாக செயல்பட்டது. குறிப்பாக பந்துவீச்சில் துல்லியமாக பந்துவீசி அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்து சொந்த மண்ணில் அவ்வளவு சுலபமாக வீழ்ந்து விட மாட்டோம் என்று தென்னாப்பிரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுத்து மாஸ் கம் பேக் கொடுத்துள்ளது.

IND vs RSA Chahal Axar Patel

வரலாற்று தோல்வி:
அதைவிட இப்போட்டியில் அந்த அணியை வெறும் 87 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா சர்வதேச கிரிக்கெட்டில் குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்ய வைத்து முதல் 2 போட்டிகளில் கொடுத்த தோல்விகளுக்குப் பழிதீர்துள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவின் குறைந்தபட்ச ஸ்கோர் இதோ:
1. 87 – இந்தியாவுக்கு எதிராக, ராஜ்கோட், 2022*
2. 89 – ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, ஜோகன்னஸ்பர்க், 2020
3. 96 – ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, கேப் டவுன், 2020
4. 98 – இலங்கைக்கு எதிராக, கொழும்பு, 2018

இதையும் படிங்க : IND vs RSA : தெ.ஆ’வை நொறுக்கிய தினேஷ் கார்த்திக், தோனியின் 3 சாதனைகளை உடைத்து புதிய சாதனை

அத்துடன் இப்போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தனது மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது.

Advertisement