IND vs RSA : தெ.ஆ’வை நொறுக்கிய தினேஷ் கார்த்திக், தோனியின் 3 சாதனைகளை உடைத்து புதிய சாதனை

MS Dhoni vs DInesh Karthik
Advertisement

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா முன்னிலை வகித்தது. அந்த நிலைமையில் ஜூன் 17-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 4-வது போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்தியா 20 ஓவர்களில் போராடி 169/6 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் ருதுராஜ் கைக்வாட் 5 (7) ரன்களில் அவுட்டாகி ஏமாற்ற அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர் 4 (2) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

Dinesh Karthik vs RSA

அந்த சமயத்தில் இஷான் கிசனும் 27 (26) ரன்களில் அவுட்டானதால் 40/3 என மோசமான தொடக்கத்தை பெற்ற இந்திய ஆரம்பத்திலேயே திணறியது. அப்போது கேப்டன் ரிஷப் பண்ட் வழக்கம்போல 17 (23) ரன்களில் அவுட்டாகி சொதப்பினார். அதனால் 13 ஓவரில் 81/4 என மேலும் திணறிய இந்தியா இந்த முக்கிய போட்டியில் 150 ரன்களையாவது தண்டுமா என்ற கவலை ரசிகர்களுக்கு ஏற்பட்டது.

- Advertisement -

காப்பாற்றிய டிகே:
அந்த மோசமான தருணத்தில் ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியா – தினேஷ் கார்த்திக் ஆகியோர் பொறுப்புடனும் அதேசமயம் அதிரடியாகவும் ரன்களை சேர்த்தனர். 5-வது விக்கெட்டுக்கு 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடி இந்தியாவை போராடி மீட்டெடுத்தது. அதில் 3 பவுண்டரி 3 சிக்சருடன் 46 (31) ரன்கள் எடுத்திருந்தபோது ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்தாலும் மறுபுறம் தென் ஆப்பிரிக்காவை வெளுத்து வாங்கிய தினேஷ் கார்த்திக் 9 பவுண்டரி 2 சிக்சருடன் அரைசதம் அடித்து 55 (27) ரன்கள் குவித்து அற்புதமான பினிஷிங் கொடுத்து கடைசி ஓவரில அவுட்டானார்.

Dinesh Karthik

அதை தொடர்ந்து 170 என்ற இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்காவை கச்சிதமாக பந்துவீசிய இந்திய பவுலர்கள் ஆரம்பம் முதலே பெரிய ரன்களை எடுக்க விடாமல் மடக்கிப் பிடித்தனர். அதனால் குயின்டன் டி காக் 14 (13) ரன்களில் ரன் அவுட்டாக கேப்டன் தெம்பா பவுமா 8 (11) ரன்களில் டைவ் அடித்தபோது காயமடைந்ததால் ரிட்டயர்டு ஹர்ட்டாகி சென்றார்.

- Advertisement -

இந்தியா மாஸ்:
போதாகுறைக்கு ப்ரிட்டோரியஸ் 0 (6), ஹென்றிச் க்ளாஸென் 8 (8), வேன் டெர் டுஷன் 20 (20), டேவிட் மில்லர் 9 (7) என கடந்த போட்டிகளில் அச்சுறுத்திய பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் அவுட் செய்த இந்தியா போட்டியை தனது பக்கம் திருப்பியது. இறுதியில் 16.5 ஓவரில் 87/9 ரன்களை மட்டுமே எடுத்து தென் ஆப்பிரிக்காவுக்கு பவுமா பேட்டிங் செய்ய வராததால் இந்தியா 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பந்துவீச்சில் அதிகபட்சமாக ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகளும் 2 விக்கெட்டும் எடுத்தனர். அதனால் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 2 – 2* என சமன்செய்து தென் ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுத்த இந்தியா கடைசி போட்டியில் வென்று சொந்த மண்ணில் கோப்பையை வெல்ல தயாராகியுள்ளது.

Harshal Patel David Miller IND vs RSA

இப்போட்டியில் 55 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். கடந்த 2004இல் இந்தியாவுக்காக அறிமுகமான இவருக்கு அதே காலகட்டத்தில் அறிமுகமாகி விக்கெட் கீப்பராகவும் கேப்டனாகவும் அபாரமாக செயல்பட்டு விஸ்வரூபம் எடுத்த எம்எஸ் தோனி இருந்ததால் இளமை காலத்தில் பெரும்பாலும் தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

- Advertisement -

சளைத்தவர் அல்ல:
இருப்பினும் இடையிடையே ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்டு இந்திய அணிக்கு விளையாடிய அவரை தோனியுடன், ரிஷப் பண்ட், ராகுல் போன்ற விக்கெட் கீப்பர்கள் வந்ததால் இந்திய அணி நிர்வாகம் தொடர்ந்து வாய்ப்பளிக்காமல் கழற்றி விட்டுக் கொண்டே வந்தது.

Dinesh Karthik MoM

ஆனாலும் மனம் தளராமல் இந்தியாவுக்காக விளையாட தொடர்ந்து கடுமையாக உழைத்து வந்த அவர் ஐபிஎல் 2022 தொடரில் பெங்களூரு அணிக்காக தோனியை விட மிகச் சிறந்த பினிஷராக செயல்பட்டு 330 ரன்களை 183.33 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் குவித்து 3 – 4 வெற்றிகளை தனி ஒருவனாக பெற்றுக் கொடுத்தார். அதனால் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு 3 வருடங்கள் கழித்து தாமாக அவரைத் தேடி வந்தது.

- Advertisement -

1. அதில் இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளிலுமே அற்புதமாக பேட்டிங் செய்த அவர் நேற்றைய போட்டியில் தனது 37 வயதில் 203.70 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் முதல் முறையாக அரைசதம் அடித்தார். அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் மூத்த வயதில் அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற எம்எஸ் தோனியின் சாதனையை உடைத்த அவர் புதிய சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. தினேஷ் கார்த்திக் : 37 வருடம் 16 நாட்கள்
2. எம்எஸ் தோனி : 36 வருடம் 229 நாட்கள்

2. அதேபோல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மூத்த வயதில் ஆட்டநாயகன் விருதை வென்ற இந்திய வீரர் என்ற தோனியை முந்திய அவர் புதிய சாதனையை படைத்தார்.

3. அத்துடன் இந்தியா தடுமாறியபோது 6-வது இடத்தில் களமிறங்கி வெளுத்து வாங்கிய அவர் சர்வதேச டி20 போட்டிகளில் 6-வது இடத்தில் களமிறங்கி அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த இந்திய பேட்ஸ்மேன் என்ற தோனியின் சாதனையும் உடைத்து அவருக்கு சளைத்தவர் அல்ல என்று நிரூபித்துள்ளார்.

இதையும் படிங்க : IND vs RSA : எனது இந்த சிறப்பான ஆட்டத்தை நான் இவருக்காக சமர்ப்பிக்க விரும்புகிறேன் – ஆவேஷ் கான் பேட்டி

அந்தப் பட்டியல் இதோ:
1. தினேஷ் கார்த்திக் : 55 தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 2022*
2. எம்எஸ் தோனி : 52*, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 2018
3. மனிஷ் பாண்டே : 50*, நியூசிலாந்துக்கு எதிராக, 20220

Advertisement