இங்கிலாந்து சென்று தானாக ஆப்பு வைத்து கொண்ட தினேஷ் கார்த்திக் – சர்ச்சையாகும் கார்த்திக்கின் பேச்சு

Karthik
- Advertisement -

இந்திய அணியின் வீரரான தினேஷ் கார்த்திக் பல ஆண்டுகளாக இந்திய அணியில் அவ்வப்போது உள்ளேயும், வெளியேயும் இருந்து வருகிறார். சில காலம் தொடர்ச்சியாக அணியில் இடம்பெறும் கார்த்திக் அதன் பிறகு சில காலம் அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருவார். இதுவே அவரது கிரிக்கெட் வாழ்வில் தொடர்கதை ஆகிவிட்டது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய அணிக்காக அறிமுகமாகி இருந்தாலும் இன்று வரை நிரந்தர இடம் இல்லாமல் தினேஷ் கார்த்திக் விளையாடி வருகிறார்.

Karthik

- Advertisement -

இருப்பினும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இந்திய அணியில் அவர் பல போட்டிகளில் விளையாடியுள்ளார். 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இடம் பிடித்திருந்த அவர் அதன் பிறகு இந்திய அணியில் இடம்பெறவில்லை எனவே தற்போது ஐபிஎல் போக மீதமுள்ள நாட்களை வர்ணனையாளர் பணிசெய்து கழிக்கலாம் என்று முடிவு முடிவுசெய்த தினேஷ் கார்த்திக் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்காக வர்ணனை செய்ய இங்கிலாந்து சென்று இருந்தார்.

அதனை தொடர்ந்து அவரது வர்ணனை அந்த இறுதிப்போட்டியில் ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பினை பெற்றது. அதன் பிறகு இப்போது இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரில் அவர் வர்ணனை செய்து வருகிறார். இந்நிலையில் இப்படி வர்ணனை செய்ய செய்த ஒரு போட்டியில் அவர் பேசிய சில கருத்துக்கள் தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளன.

karthik 1

அதன்படி பேட்ஸ்மென் குறித்தும், பேட் குறித்தும் போட்டியின் போது பேசிய தினேஷ் கார்த்திக் : எந்த ஒரு பேட்ஸ்மேனுக்கும் தன் பேட்டையை விட மற்றொருவரின் பேட்டை தான் பிடிக்கும் என்று கூறியது மட்டுமல்லாமல் எப்படி நமக்கு நம் மனைவியைவிட அடுத்தவர்களின் மனைவியை மிகவும் பிடிக்கிறதோ அதேபோலத்தான் அடுத்தவரின் பேட் நமக்கு மிகவும் பிடிக்கும் என்று கார்த்திக் பேசியது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Karthik

ஏற்கனவே பாண்டியா மற்றும் ராகுல் ஆகியோர் பெண்கள் குறித்த சர்ச்சையான கருத்துகளை கூறியதால் அணியிலிருந்து நீக்கப்பட்டு இருந்தனர். அதே போன்று தற்போது கார்த்திக்கின் இந்த சர்ச்சையான பேச்சும் ஒருவேளை சிக்கலை சந்திக்குமாயின் கார்த்திக்கு தடை விதிக்கப்பட கூட வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement