
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய அணிகளில் ஒன்றாக ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் விளங்கி வருகிறது. இதுவரை ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் தலா ஐந்து முறை கோப்பையை வென்றிருந்தாலும் அந்த அணிகளுக்கு இணையான ரசிகர்கள் பட்டாலத்தைக் கொண்ட அணியாக ஆர்சிபி அணி திகழ்ந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஆர்.சி.பி அணிக்காக ரசிகர்கள் தங்களது முழு ஆதரவினை அளித்து வந்தாலும் இதுவரை அந்த அணி ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. ஆனாலும் ஆர்சிபி அணியை பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்த பாடில்லை. அந்த அளவிற்கு ஆர்சிபி அணியை ரசிகர்கள் ஆதரித்து வருகின்றனர்.
கடந்த பல ஆண்டுகளாகவே விராட் கோலி தலைமையில் அந்த அணி கோப்பையை கைப்பற்றாவிட்டாலும் இன்னமும் அந்த அணிக்கு ஆதரவு குவிந்து வருவதற்கு காரணம் விராட் கோலி ஒரு முறையாவது ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய விட வேண்டும் என்பதுதான். கடந்த ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கு முன்னர் கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலி தற்போது சாதாரண வீரராக விளையாடுகிறார். அவருக்கு பதிலாக டூப்ளிசிஸ் அந்த அணியின் கேப்டனாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது 40 வயதை எட்டியுள்ள டூபிளெஸ்ஸிஸ் இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே விளையாடுவார் என்பதனால் இந்த மெகா ஏலத்திற்கு முன்னதாக அவரை ஆர்சிபி அணி வெளியேற்ற வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை அவர் வெளியேற்றப்பட்டால் அந்த இடத்திற்கு ரோகித் சர்மா வந்து கேப்டன்சி செய்தால் ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாகவும் ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஏனெனில் இந்திய அணியின் கேப்டனாக இருந்து டி20 கோப்பை பெற்றுக்கொடுத்த அவர் அந்த தொடரை போன்று ஆர்சிபி அணியிலும் விராட் கோலியுடன் துவக்க வீரராக களம் இறங்கும் பட்சத்தில் ஆர்சிபி அணி மேலும் பல பெரும் என்பதால் ரோஹித் சர்மா அந்த அணியில் விளையாட வேண்டும் என்று பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா விலக்கப்பட்டு சாதாரண வீரராக மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடியதால் அவருக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக மெகா ஏலத்திற்கு முன்னதாகவே அவர் வெளியேற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக ரோகித் சர்மா எந்த அணியில் விளையாடப் போகிறார்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிக ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தினேஷ் கார்த்திக்கிடம் ஆர்சிபி அணிக்காக ரோகித் சர்மா விளையாட வாய்ப்புள்ளதா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதையும் படிங்க : 191 ரன்ஸ்.. இறங்கி அடித்த வங்கதேச டான் ப்ராட்மேன் ரஹீம்.. பாகிஸ்தானை வருந்த வைத்து 3 சாதனை
ஆனால் அந்த கேள்விக்கு தினேஷ் கார்த்திக் எந்த பதிலையும் அளிக்காமல் மௌனமாக இருந்து அடுத்த கேள்விக்கு சென்று விட்டார். இதன் மூலமாக ரோகித் சர்மா மெகா ஏலத்திற்கு முன்னதாகவே ஆர்.சி.பி அணிக்காக வாங்கப்பட்டாலும் அதற்கு ஆச்சர்யம் இல்லை என்றே தெரிகிறது. ஏனெனில் சமீப காலமாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் நெருக்கமாக இருந்து வரும் வேளையில் அவர்களது நட்பு இந்த முடிவை எடுக்க வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.