தோனி தான் உங்க கேரியரை முடிச்சாரா? சில ரசிகர்களின் விவாதத்துக்கு டிகே நேரடியாக கொடுத்த பதில் இதோ

- Advertisement -

தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கடந்த 2004ஆம் ஆண்டு இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றார். இருப்பினும் வரலாற்றின் இதர இந்திய விக்கெட் கீப்பர்கள் போலவே விக்கெட் கீப்பிங் செய்வதில் அசத்திய அவர் பேட்டிங்கில் சுமாராக செயல்பட்ட நிலையில் அதே 2004இல் அறிமுகமான தோனி முதல் போட்டியிலேயே டக் அவுட்டானாலும் நாளடைவில் அதிரடியாக செயல்பட்டு அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். குறிப்பாக இந்திய விக்கெட் கீப்பர்கள் என்றால் பந்து பிடித்து போடுபவர்களாக மட்டுமல்லாமல் அதிரடியாக ரன்களை சேர்த்து வெற்றிகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற புதிய இலக்கணத்தை உருவாக்கிய அவர் குறைந்த இன்னிங்ஸில் (49) உலகின் நம்பர் ஒன் ஒன்டே பேட்ஸ்மேனாக முன்னேறி உலக சாதனையும் படைத்தார்.

Dinesh Karthik MS Dhoni

- Advertisement -

அதை விட உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவமில்லாத போதிலும் 2007 டி20 உலக கோப்பையை, 2011 உலக கோப்பையை, 2013 சாம்பியன்ஸ் ட்ராபி உட்பட ஏராளமான வெற்றிகளையும் மிகசிறந்த பினிஷராகவும் கேப்டனாகவும் செயல்பட்ட அவரால் 2019 வரை தினேஷ் கார்த்திக், பார்திவ் படேல் போன்ற இதர விக்கெட் கீப்பர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் தோனி அவர்களுடைய குறிப்பாக தினேஷ் கார்த்திக் கேரியரை முடித்து விட்டார் இல்லையேல் அவர் மார்க் பவுச்சர் போல வந்திருப்பார் என்று சில ரசிகர்கள் இப்போதும் கூட விமர்சிக்கிறார்கள்.

கேரியரை முடித்தாரா:
ஆனால் 26 டெஸ்ட் போட்டிகளில் 1025 ரன்களை 25.00 என்ற சராசரியிலும் 94 ஒருநாள் போட்டிகளில் 30.21 என்ற சராசரியிலும் எடுத்த தினேஷ் கார்த்திக் கொடுக்கப்பட்ட வாய்ப்பில் சிறப்பாக செயல்படவில்லை என்பதே நிதர்சனம். மேலும் தோனி 4இல் 3 மிகப்பெரிய போட்டிகளில் அழுத்தத்திற்கு பதறாமல் நிலைத்து நின்று வெற்றிகளை பெற்றுக் கொடுப்பவராக அறியப்படுபவர். ஆனால் தினேஷ் கார்த்திக் பெரும்பாலும் அழுத்தமான போட்டிகளில் முக்கிய நேரங்களில் சொதப்புவதை வழக்கமாக வைத்திருப்பவர்.

DInesh Karthik

எடுத்துக்காட்டாக தோனியின் ஓய்வுக்கு பின் 2022 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு 3 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்த தினேஷ் கார்த்திக் இருதரப்பு தொடர்களில் அசத்தலாக செயல்பட்டாலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பையில் ஒரு சிக்சர் கூட அடிக்காமல் சொதப்பியது தமிழக ரசிகர்களையே கடுப்பாக வைத்தது. மொத்தத்தில் ஒருநாள் உலக கோப்பையில் 7.00, டி20 உலகக்கோப்பையில் 9.14 என்ற படுமோசமான பேட்டிங் சராசரியை வைத்துள்ள தினேஷ் கார்த்திக் தோனிக்கு நிகராக செயல்பட முடியாத காரணத்தாலேயே கடைசி வரை சர்வதேச கிரிக்கெட்டில் ஜொலிக்க தவறினார் என்பதேநிதர்சனம்.

- Advertisement -

இந்நிலையில் 2004இல் இந்தியா ஏ அணிக்காக ஒரே நேரத்தில் விளையாடிய போதும் தோனி தம்மை விட சிறப்பாக செயல்பட்டு பின்னர் சர்வதேச கிரிக்கெட்டிலும் அசத்தியதால் இன்று மக்களால் ஹீரோவாக கொண்டாடப்படுவதாக தினேஷ் கார்த்திக் வெளிப்படையாக பேசியுள்ளார். இது பற்றி ஆர்சிபி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

“நான் அவருக்கு முன்பே அறிமுகமானேன். நாங்கள் இருவரும் ஒன்றாக இந்தியா ஏ அணி சுற்றுப்பயணத்தில் கலந்து கொண்டோம். அங்கிருந்து நான் இந்தியாவுக்கு தேர்வு செய்யப்பட்டு நல்ல செயற்பாடுகளை வெளிப்படுத்தினேன். அங்கிருந்து மற்றுமொரு சுற்றுப்பயணத்திற்கு சென்ற போது நடைபெற்ற ஒருநாள் தொடரில் தோனி அதிரடியான பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்க விட்டார். அதை ஏற்கனவே சிலர் செய்திருந்தாலும் அவரை போல் யாரும் விளையாடவில்லை என்று நிறைய பேர் பேச ஆரம்பித்தனர். குறிப்பாக தோனியை ஸ்பெஷல் பிளேயர் என்று அழைத்தனர்”

- Advertisement -

“அதனால் இந்திய அணியில் நான் தேர்வு செய்யப்பட்ட போதும் அவர் என்னையும் தாண்டி எனக்கு பதிலாக அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் தேர்வு செய்யப்பட்டார். அந்த அனைத்து வாய்ப்புகளிலும் அவர் சிறப்பாகவே செயல்பட்டார். இருப்பினும் நான் அங்கே தோனி இருந்தாலும் இல்லையென்றாலும் உலகின் சிறந்த பேட்ஸ்மனாக உருவெடுக்கும் பாதையில் நடந்தேன். மறுபுறம் தோனி தனக்காக சிறப்பாக செயல்பட்டு நிலையான இடத்தை பிடித்து விட்டார். அதில் எந்த தவறும் இல்லை”

இதையும் படிங்க:இந்தியாவுலயே உன்னால ரன் குவிக்க முடியலைனா. அப்புறம் என்ன பண்றது – இந்திய வீரரை வெளுத்து வாங்கிய கங்குலி

“நாளடைவில் மேல் பேட்டிங் வரிசையில் களமிறங்கும் வாய்ப்பை பெற்ற தோனி ஒருநாள் கிரிக்கெட்டில் சதமடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 85 ரன்கள் விளாசி விக்கெட் கீப்பிங்கிலும் அசத்தினார். அதை விட ஒரே இரவில் அவர் பிராண்டாக உருவெடுத்தார். அதிலிருந்து அவர் ஹீரோவாக கொண்டாடப்பட்ட நிலையில் நான் கண்டுகொள்ளப்படவில்லை. இருப்பினும் அதற்காக வருத்தமடையாத நான் எனக்கான வாய்ப்புகளை தேடினேன்” என்று கூறினார்.

Advertisement