இதை நம்பவே முடியாம நிலா மேல இருக்கோம்.. அதை செஞ்சுட்டு தான் இலங்கைக்கு போவோம்.. சண்டிமல் சபதம்

Dinesh Chandimal
- Advertisement -

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 27 வருடங்கள் கழித்து இலங்கை வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு சென்றுள்ள இலங்கை அங்கு 3 போட்டிகள் போன்ற டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்தத் தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 21ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் துவங்கியது.

அந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே கொஞ்சம் தடுமாற்றமாக விளையாடிய இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோற்கடித்தது. அதனால் பென் ஸ்டோக்ஸ் இல்லாமலேயே இலங்கையை தோற்கடித்து 1 – 0* (3) என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது. மறுபுறம் முதல் இன்னிங்ஸில் 236 ரன்கள் மட்டுமே எடுத்த இலங்கை இரண்டாவது இன்னிங்ஸில் 326 ரன்கள் எடுத்து போராடியும் வெற்றி காண முடியவில்லை.

- Advertisement -

நிலா மேல் இலங்கை:

இந்நிலையில் அப்போட்டியில் வெற்றி பெறா விட்டாலும் தாங்கள் விளையாடிய விதத்தால் ஏற்பட்ட மகிழ்ச்சியில் நிலாவின் மேல் மிதப்பதாக இலங்கை வீரர் தினேஷ் சண்டிமல் தெரிவித்துள்ளார். குறிப்பாக அறிமுக வீரர் மிலன் ரத்நாயகே 7வது இடத்தில் களமிறங்கி 72 ரன்கள் அடித்தது, கமிண்டு மெண்டிஸ் சவாலான இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்து 113 ரன்கள் குவித்தது போன்றவற்றை தாங்களே எதிர்பார்க்கவில்லை என சண்டிமல் கூறியுள்ளார்.

அதே போல ஜெயசூர்யா, அசிதா பெர்னால்டோ ஆகிய தங்களுடைய பவுலர்களும் அசத்தியதாக அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். எனவே இங்கிருந்து அடுத்த 2 போட்டிகளில் வென்று இத்தொடரின் கோப்பையை இலங்கைக்கு எடுத்துச் செல்வோம் என்றும் சண்டிமல் சபதம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

வெற்றி சபதம்:

“இப்போட்டியின் முடிவுக்காக அல்ல. நம்ப முடியாத வகையில் விளையாடிய விதத்திற்காக ஒரு அணியாக நாங்கள் தற்போது நிலாவின் மேலே இருக்கிறோம். முதல் நாளின் முதல் பாதியில் நாங்கள் 3 விக்கெட்டுகளை இழந்தோம். அப்போது ரத்நாயகே – தனஞ்ஜெயா ஆகியோர் அற்புதமாக பேட்டிங் செய்து எங்களை எடுத்து வந்தனர். அதே போல பந்து வீச்சில் அசிதா மற்றும் பிரபத் ஜெயசூர்யா ஆகியோர் போட்டி முழுவதும் சிறப்பாக பந்து வீசினார்கள்”

இதையும் படிங்க: என்னோட வேலையை ஈஸியாக்கியத்தற்கு நன்றி.. தனது பார்ட்னர் ஷிகர் தவானை வாழ்த்திய கேப்டன் ரோஹித் சர்மா

“அந்த வகையில் எங்களுக்கு நிறைய நேர்மறையான விஷயங்கள் கிடைத்தது. எனவே லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் அடுத்தப் போட்டியில் நாங்கள் நல்ல போட்டியை கொடுத்து இலங்கைக்கு செல்வதற்கு முன்பாக இங்கிருந்து போட்டிகளை வெல்வோம் என்று உறுதியாக சொல்வேன். அதே போல கமின்ஸ் மெண்டிஸ் இங்கிலாந்து மண்ணில் தனது முதல் தொடரிலேயே நம்ப முடியாத சதமடித்தார்” என்று கூறினார்.

Advertisement