இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஷிகர் தவான் சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். டெல்லியைச் சேர்ந்த அவர் கடந்த 2010 – 2022 வரை 3 வகையான கிரிக்கெட்டிலும் 10867 ரன்கள் குவித்து இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். குறிப்பாக 2013 சாம்பியன்ஸ் டிராபியில் தங்க பேட் விருது வென்ற அவர் இந்தியா கோப்பையை வெல்ல உதவினார்.
அதே போல 2017 சாம்பியன்ஸ் ட்ராபியில் மீண்டும் தங்க பேட் விருது வென்ற தவான் ஐசிசி ஒருநாள் தொடர்களில் 65.15 பேட்டிங் சராசரியை கொண்டுள்ளார். அதன் வாயிலாக உலகிலேயே 2 சாம்பியன்ஸ் டிராபி தங்க பேட் விருது வென்ற வீரர் மற்றும் ஐசிசி ஒருநாள் தொடர்களில் அதிக பேட்டிங் சராசரியை கொண்ட வீரர் ஆகிய 2 உலக சாதனைகளை தவான் படைத்துள்ளார்.
ரோஹித் வாழ்த்து:
அதனால் மிஸ்டர் ஐசிசி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அவர் தற்போது வருங்கால வீரர்களுக்கு வழிவிட்டு 38 வயதில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு ஏராளமான முன்னாள் இந்நாள் வீரர்களும் ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். அந்த வரிசையில் தம்முடைய முன்னாள் ஓப்பனிங் பார்ட்னரான சிகர் தவானுக்கு கேப்டன் ரோஹித் சர்மா இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பேட்டிங்கில் எதிர்புறம் சிறப்பாக விளையாடிய தம்முடைய ஷிகர் தவான் தம்முடைய பேட்டிங்கை எளிதாக்கியதாக ரோஹித் பாராட்டியுள்ளார். இது பற்றி ரோஹித் கூறியுள்ளது பின்வருமாறு. “இந்திய அணியில் உடைமாற்றும் அறையை பகிர்ந்து கொண்டது முதல் களத்தில் வாழ்நாள் நினைவுகளை பகிர்ந்து கொண்டது வரை. நீங்கள் எப்போதும் மறுமுனையில் இருந்து என்னுடைய வேலையை எளிதாக்கினீர்கள். நீங்கள் அல்டிமேட் ஜாட்” என்று புகைப்படங்களுடன் கூறியுள்ளார்.
ரோஹித் – தவான் ஜோடி:
முன்னதாக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ரோஹித் – தவான் ஆகியோர் இந்தியாவின் ஒரு மிகச்சிறந்த ஓப்பனிங் ஜோடியாக செயல்பட்டனர். குறிப்பாக அந்த இருவருமே ஆரம்பக் காலங்களில் மிடில் ஆர்டரில் விளையாடி தடுமாறிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களை 2013 சாம்பியன்ஸ் டிராபியில் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி துவக்க வீரர்களாக களமிறக்கினார்.
இதையும் படிங்க: பேட்டிங்கில் உங்களோட அதிரடி போதும்.. இனிமே இதை பண்ணுங்க – ரோஹித் சர்மாவிற்கு ஸ்பெஷல் பயிற்சி அளிக்கும் அபிஷேக் நாயர்
அந்த வாய்ப்பை இறுக்கமாக பயன்படுத்திக் கொண்ட ரோஹித் – தவான் ஆகியோர் 2019 உலகக்கோப்பை வரை இந்தியாவின் நிறைய வெற்றிகளை பங்காற்றினர். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் அவர்கள் ஜோடியாக 115 இன்னிங்ஸில் 5148 ரன்களை குவித்துள்ளனர். அதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் – கங்குலிக்கு பின் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் குவித்த இந்திய ஓப்பனிங் ஜோடியாக அவர்கள் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



