- Advertisement -
டிஎன்பிஎல்

டிஎன்பிஎல் 2024 : 11 போர்ஸ் 3 சிக்ஸ்.. ஆல் ரவுண்டராக மிரட்டிய அஸ்வின்.. திருப்பூரை நாக் அவுட்டாக்கி ஃபைனலில் திண்டுக்கல்

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஆகஸ்ட் 2ஆம் தேதி தலைநகர் சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில் குவாலிபயர் 2 போட்டி நடைபெற்றது. அதில் குவாலிபயர் 1 போட்டியில் தோல்வியை சந்தித்த திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் எலிமினேட்டர் போட்டியில் வெற்றி கண்ட திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய திருப்பூருக்கு துஷார் ரஹீஜா 8 ரன்னில் கேப்டன் அஸ்வின் சுழலில் சிக்கினார். அடுத்த சில ஓவரில் மறுபுறம் தடுமாறிய அமித் சாத்விக் 8 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். ஆனால் அடுத்து வந்த பாலச்சந்தர் அனிருத் 6, ராதாகிருஷ்ணன் 2, கேப்டன் சாய் கிஷோர் 2 ரன்களில் அவுட்டாகி அழுத்தத்தை உண்டாக்கினர்.

- Advertisement -

அஸ்வின் மிரட்டல்:
அதனால் 38/5 என ஆரம்பத்திலேயே திண்டாடிய அந்த அணிக்கு அடுத்ததாக வந்த கணேஷ் 17, மான் பாப்னா 26, முகமது அலி 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இறுதியில் 19.4 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த திருப்பூர் வெறும் 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்தளவுக்கு பந்து வீச்சில் மிரட்டிய திண்டுக்கல் சார்பில் அதிகபட்சமாக விக்னேஷ் 3, சுபோத் பாட்டி 2, வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து 109 என்ற சுலபமான இலக்கை துரத்திய திண்டுக்கல் அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடியாக விளையாடினார். அவருடன் 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் தடுமாற்றமாகவே விளையாடிய விமல் குமார் 28 (27) ரன்களில் புவனேஸ்வரன் வேகத்தில் ஆட்டமிழந்தார். ஆனால் இந்த பக்கம் தொடர்ந்து மிரட்டலாக விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின் அரை சதமடித்தார்.

- Advertisement -

அந்த வகையில் நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி 11 பவுண்டரி 3 சிக்சர்களைப் பறக்க விட்ட அவர் 69* (30) ரன்களை 230 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி ஃபினிஷிங் கொடுத்தார். அவருடன் பாபா இந்திரஜித் 8* (8) ரன்கள் எடுத்ததால் 10.5 ஓவரிலேயே 112/1 ரன்கள் எடுத்த திண்டுக்கல் 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.

இதையும் படிங்க: இந்தியா 10 ரன்ஸ் எக்ஸ்ட்ரா கொடுத்தாங்க.. அந்த 2 பேர் தான் போட்டியை மாத்துனாங்க.. ஆட்டநாயகன் வெல்லலாகே பேட்டி

அதனால் திருப்பூரை நாக் அவுட் செய்து இத்தொடரில் இருந்து வெளியேற்றிய திண்டுக்கல் ஃபைனலுக்கு தகுதி பெற்றது. இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை சேப்பாக்கத்தில் நடைபெறும் மாபெரும் இறுதிப் போட்டியில் நடப்புச் சாம்பியன் கோவை மற்றும் திண்டுக்கல் அணிகள் கோப்பையை வெல்வதற்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன.

- Advertisement -