இந்தியா 10 ரன்ஸ் எக்ஸ்ட்ரா கொடுத்தாங்க.. அந்த 2 பேர் தான் போட்டியை மாத்துனாங்க.. ஆட்டநாயகன் வெல்லலாகே பேட்டி

Wellalage
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி சமனில் முடிந்தது. ஆகஸ்ட் இரண்டாம் தேதி கொழும்பு நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவரில் 230/8 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக துணித் வெல்லலாகே 67* (65), நிஷாங்கா 56 ரன்கள் எடுத்தனர்.

இந்தியா சார்பில் அதிகபட்சமாக அக்சர் பட்டேல் மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத் தொடர்ந்து சேசிங் செய்த இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 58 ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தை கொடுத்தார். ஆனால் எதிர்ப்புறம் கில் 16, விராட் கோலி 24, வாஷிங்டன் சுந்தர் 5, ஸ்ரேயாஸ் ஐயர் 23, கேஎல் ராகுல் 31, அக்ஸர் பட்டேல் 33 ரன்களில் அவுட்டாகி ஃபினிஷிங் செய்ய தவறினர்.

- Advertisement -

இலங்கையின் ஆட்டநாயகன்:
அதே போல கடைசி நேரத்தில் போராடிய சிவம் துபேவும் 25 ரன்னில் அவுட்டானார். இறுதியில் 1 விக்கெட் கைவசம் இருந்த நிலையில் ஒரு ரன் தேவைப்பட்ட போது சிங்கிள் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அர்ஷ்தீப் சிங் அதிரடியாக விளையாட முயற்சித்து அவுட்டாகி வெற்றியை நழுவ விட்டார். அதனால் இந்தியாவை 230 ரன்களுக்கு சுருட்டிய இலங்கை சார்பில் அதிகபட்சமாக கேப்டன் அஸலங்கா மற்றும் ஹசரங்கா தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அதனால் டி20 தொடரில் இந்தியாவிடம் சந்தித்த தொடர் தோல்வியை நிறுத்தியுள்ள இலங்கை இப்போட்டியில் தோல்வியை சந்திக்காமல் நிம்மதி பெருமூச்சு விட்டது. இப்போட்டியில் 67* ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய துணித் வெல்லலாகே ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் பேட்டிங்கில் தங்களுடைய அணி தடுமாறிய போது எப்படியாவது 220 ரன்கள் அடித்தால் போதும் என்று நினைத்ததாக அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

ஆனால் கடைசியில் இந்திய பவுலர்கள் தம்முடைய போராட்டத்திற்கு பரிசாக 10 ரன்கள் எக்ஸ்ட்ரா கொடுத்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நான் திட்டத்துடன் வந்தேன். பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருந்தது. அதில் ஸ்பின்னர்கள் நன்றாக பந்து வீசிய நிலையில் நான் இந்திய பவுலர்களை அழுத்தத்திற்குள் போட முயற்சித்தேன். நானும் லியாங்கேவும் பார்ட்னர்ஷிப் அமைக்க விரும்பினோம்”

இதையும் படிங்க: அந்த 1 ரன்னை எடுத்துருக்கனும்.. வெற்றி நழுவ இது தான் காரணம்.. கேப்டன் ரோஹித் ஏமாற்ற பேட்டி

“அதன் பின் ஹசரங்கா என்னுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தார். பிட்ச் கொஞ்சம் ஸ்லோவாக இருந்தது. எனவே நாங்கள் 220 ரன்கள் அடிப்பதற்கு திட்டமிட்டோம். 2வது இன்னிங்சில் பிட்ச் கொஞ்சம் முன்னேறி நன்றாக இருந்தது. எங்களுடைய கேப்டன் அசலங்கா மற்றும் ஹசரங்கா ஆகியோர் போட்டியை மாற்றினர். இன்று நாங்கள் நல்ல போட்டியை விளையாடினோம்” என்று கூறினார்.

Advertisement