இனியும் அவரை இந்திய அணியில் சேர்க்க தாமதிக்க கூடாது. சீக்கிரம் வாய்ப்பு குடுங்க – திலீப் வெங்சர்க்கார்

Dilip
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ளன. இந்த மூன்று போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 4வது டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 2ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரில் முன்னிலை வகிக்கும் என்பதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

indvseng

- Advertisement -

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு மிடில் ஆர்டர் வரிசையே பிரச்சனையாக இருந்து வருகிறது. இதனால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவு குவிந்து வருகிறது. அந்த வகையில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான புஜாரா, கோலி, ரகானே, பண்ட் ஆகிய நால்வரும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதனால் இந்திய அணியின் ரன் குவிப்பில் பிரச்சனை ஏற்படுகிறது. இதன் காரணமாக பென்ச்சில் உள்ள மாயங்க் அகர்வால், சூர்யகுமார் யாதவ், விஹாரி ஆகியோர் வாய்ப்பு கிடைக்காமல் வெளியிலேயே உள்ளனர். இந்நிலையில் சீனியாரிட்டியை கணக்கில் கொள்ளாமல் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

sky

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான திலிப் வெங்சர்க்கார் இந்திய அணியின் பேட்டிங் வரிசையை வலுப்படுத்த சூரியகுமார் யாதவை சேர்த்தாக வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியில் தற்போது பேட்டிங் பலவீனம் தென்படுகிறது. அதனை சரிசெய்ய வேண்டும் என்றால் உடனடியாக சூரியகுமார் யாதவை அணியில் சேர்க்க வேண்டும்.

sky

மேலும் அணியில் ஒரு பேட்ஸ்மேன் அதிகமாக இருந்தால்தான் இந்திய அணி இங்கிலாந்தை சமாளிக்க முடியும். இந்திய டெஸ்ட் அணியில் சூர்யகுமார் யாதவ் இணைய வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதனால் அவரைச் சேர்க்க இனியும் தாமதிக்கக் கூடாது என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement