டிராவிட் சொன்னது தான் இந்தியா – இங்கிலாந்து தொடரில் நடக்கும் – திலீப் வெங்சர்க்கார் ஆதரவு

Dilip
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி தற்போது நாட்டிங்காம் நகரில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னரே இந்த தொடரில் யார் வெற்றி பெறுவார்கள் ? என்பது குறித்த கேள்விகள் அதிகம் இருந்தன. மேலும் இது குறித்து அதிக விவாதங்களும் நடைபெற்ற நிலையில் ராகுல் டிராவிட் இந்த தொடரில் இந்திய அணி வெற்றிபெற அதிக வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

indvseng

- Advertisement -

ஆனால் பெரும்பாலானோர் இங்கிலாந்து மண்ணில் தொடர் நடைபெறுவதாலும் இங்கிலாந்தில் ஏகப்பட்ட வீரர்கள் பலமாக உள்ளதாலும் அந்த அணியே வெற்றி பெறும் என்று கூறியிருந்தனர். இந்நிலையில் டிராவிட்டின் இந்த கருத்திற்கு தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டனான திலிப் வெங்சர்க்கார் தனது ஆதரவினை தெரிவித்துள்ளார்.

இந்திய அணி இதற்கு முன்னதாக 14 ஆண்டுகளுக்கு முன்னர் 2007 ஆம் ஆண்டு டிராவிட் தலைமையில் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியிருந்தது. அதன் பின்னர் இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை கைப்பற்றாத வேளையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பேசியுள்ள வெங்சர்க்கார் கூறுகையில் :

thakur 2

நான் ராகுல் டிராவிட் கூறிய கருத்திற்கு எனது முழு ஆதரவையும் தருகிறேன். அவர் கூறியது அனைத்தையும் நான் ஒப்புக்கொள்கிறேன். ஏனெனில் தற்போது இந்திய அணி இந்த தொடரை வெல்ல நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இங்கிலாந்து அணியில் உள்ள பவுலர்களை போன்று இந்திய அணியிலும் ஷமி, பும்ரா, சிராஜ், இசாந்த் சர்மா போன்றவர்கள் உள்ளனர். இம்முறை இந்திய அணி தொடரை வெல்ல நல்ல வாய்ப்பு உள்ளது என திலிப் வெங்சர்க்கார் கூறியுள்ளார்.

மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில் : டிராவிட் ஒருபோதும் எந்த வித முன் யோசனையும் இன்றி எந்த கருத்தையும், புகழ்ச்சியையும் வெளிப்படுத்த மாட்டார். கிரிக்கெட்டில் எப்போது என்ன வேண்டுமானாலும் நடக்கும் எனவே முடிவை அவ்வளவு எளிதாக கணிக்க முடியாது. இருந்தாலும் இந்த தொடரில் இரு அணிகளின் பலத்தை அறிந்து இந்திய அணி வெல்ல வாய்ப்பு உள்ளது என்று டிராவிட் கூறியுள்ளதால் நிச்சயம் இந்திய அணி தொடரை கைப்பற்ற வாய்ப்பு உள்ளது என வெங்சர்க்கார் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement