- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஒரு திறமையான வீரருக்கு இப்படி நடப்பது அவமானம்.. சர்பராஸ் கான் விடயத்தில் நிர்வாகத்தை கடிந்த – திலீப் வெங்சர்க்கார்

இந்திய அணியின் நட்சத்திர இளம் ஆட்டக்காரரான சர்பராஸ் கான் கடந்த 2024-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் மூன்று அரைசதம் என 37 ரன்கள் சராசரியுடன் 371 ரன்கள் குவித்துள்ளார். ஆனாலும் அவருக்கு தொடர்ந்து டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்காதது பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

சர்பராஸ் கான் விடயத்தில் நிர்வாகம் செய்வது தவறு : திலீப் வெங்சர்க்கார்

ஏனெனில் உள்ளூர் போட்டிகளில் தொடர்ச்சியாக ரன் குவித்த அவருக்கு டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்த வேளையில் அப்படி தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் அவர் சிறப்பாக செயல்பட்டால் கூட அவரை தேர்வுக்குழுவினர் நிராகரிப்பது பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆனாலும் தனது உழைப்பை நிறுத்தாத அவர் சிறப்பான செயல்பாட்டை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

குறிப்பாக அண்மையில் நடைபெற்று முடிந்த சையத் முஷ்டாக் அலி தொடரில் அதிரடியான ஆட்டத்தை டி20 போட்டிகளில் வெளிப்படுத்தியிருந்த அவர் தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே தொடரிலும் பிரம்மிக்க வைக்கும் வகையில் சிறப்பான பார்மை வெளிப்படுத்தி வருகிறார். உத்தரகாண்ட் அணிக்கு எதிரான போட்டியில் 55 ரன்கள் குவித்த அவர் கோவா அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் 75 பந்துகளை சந்தித்து 9 பவுண்டரி மற்றும் 14 சிக்ஸர்கள் என 157 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.

இவரது இந்த தொடர்ச்சியான சிறப்பான ஆட்டம் காரணமாக அவருக்கு மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைக்க வேண்டும் என்ற ஆதரவு அவருக்கு குவிந்து வருகிறது. இந்நிலையில் உள்ளூர் போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வரும் அவரை இந்திய அணியின் நிர்வாகம் நிராகரித்து வருவது குறித்து சில காட்டமான கருத்துக்களை முன்னாள் இந்திய வீரரான திலீப் வெங்சர்க்கார் வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் அவர் கூறியதாவது : தேர்வுக்குழுவினர் என்ன தான் தன்னை கண்டு கொள்ளாவிட்டாலும் கிரிக்கெட்டில் மட்டுமே தனது கவனம் என்று அவர் ரசித்து விளையாடி வருகிறார். அதிலும் குறிப்பாக தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் அவர் மலை போல் ரன்களை குவித்து வருகிறார். என்னை பொறுத்தவரை விளையாட்டின் அனைத்து வடிவங்களிலும் விளையாட தகுதியான ஒரு நபர் சர்பராஸ் கான்.

இதையும் படிங்க : கேப்டன் இன்.. துணை கேப்டன் அவுட்.. நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான அணியில் – ஏற்படப்போகும் நிகழ்வு

அப்படிப்பட்ட திறமையான ஒரு வீரர் இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வருவது அவமானம் என்று கடுமையாக சாடியுள்ளார். ஏற்கனவே கடந்த பல ஆண்டுகளாக மிகச் சிறப்பாக விளையாடி வரும் அவரை இந்திய அணி கண்டிப்பாக தேர்வு செய்ய வேண்டும் என்பதே பல்வேறு முன்னாள் வீரர்களின் கருத்தாக இருந்து வரும் வேளையில் திலீப் வெங்சர்க்காரும் சர்பராஸ் கானை ஆதரித்து நிர்வாகத்தை கடிந்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -