- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அஷ்வின் வேலைக்காக மாட்டார். இவர் தான் சரியான ஆள் முன்னாள் வீரர் கடும் விமர்சனம் – ரசிகர்கள் கொதிப்பு

டெஸ்ட் போட்டிகளில் சுழற்பந்து வீச்சு தனது முக்கியத்துவத்தை இழந்து வருவதாக முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் திலீப் ஜோஷி கடும் விமர்சனத்தை வைத்துள்ளார். மேலும் அந்த காலத்தில் தங்கள் வீசிய அடிப்படை சுழற்பந்து வீச்சு இல்லாமல் தற்போது வேறுமாதிரியாக இருப்பதாக பேசியுள்ளார்.

முன்பெல்லாம் டெஸ்ட் போட்டிகள் சுழற்பந்து வீச்சை வைத்து முடிவு தீர்மானிக்கப்பட்டது. தற்போது அது போன்ற பாரம்பரிய முறையான சுழற்பந்து வீச்சு யாரிடமும் இல்லை. அனைத்து அணிகளும் தங்களது வேகப்பந்து வீச்சு பலத்தை கொண்டே டெஸ்ட் போட்டியின் முடிவை தீர்மானிக்கின்றனர்.

- Advertisement -

அந்த காலகட்டத்தில் தான் ஷேன் வார்ன், அணில் கும்ளே, முத்தையா முரளிதரன் ஆகிய சுழற்பந்து வீச்சு ஜாம்பவான்கள் வளர்ந்தனர். தற்போது அப்படி பெயர் சொல்லும் அளவிற்கு யாருமில்லை ஆஸ்திரேலியாவில் நேதன் லயன் பாரம்பரிய முறையில் சுழற்பந்து வீசுகிறார்.

இந்தியாவை பொருத்தமட்டில் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் இருக்கின்றனர் . அவர்களில் அஸ்வின் இன்னும் முன்னேற்றம் காணவேண்டும். அவரைவிட ரவீந்திர ஜடேஜா நன்றாக முன்னேறியுள்ளார். அஸ்வின் தனது பாரம்பரிய முறையை இன்னும் மெருகேற்ற வேண்டும் சுழற்பந்து வீச்சு என்பது 98% பாரம்பரிய முறைப்படி அடிப்படை சுழல் பந்து வீசுவதே ஆகும் இவ்வாறு கூறியுள்ளார் சுனில் ஜோஷி.

- Advertisement -

ஆனால் இவர் கூறிய இந்த கருத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை. ஏனெனில் அஷ்வினின் பந்துவீச்சு டெஸ்ட் போட்டிகளில் எவ்வளவு அருமையாக இருக்கின்றது என்பது நாம் அறிந்ததே மேலும் அவரின் சிறப்பான பந்துவீச்சின் பலமுறை இந்திய அணிக்கு பல சிறப்பான வெற்றிகளை தந்துள்ளார்.

அதுமட்டுமின்றி இந்திய சுழற்பந்து வீச்சாளர்களில் டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 250, 300, 350 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையும் அஸ்வின் வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by