சம்பளமே 25 லட்சம் தான்.. இதுல 75% அபராதம் வேறயா.. அடங்காத லக்னோ வீரருக்கு ஆப்படித்த பிசிசிஐ.. 2 தண்டனை

Digvesh Rathi 2
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் நான்காம் தேதி லக்னோவில் 16வது லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் மும்பையை 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி தோற்கடித்தது. அதனால் 4 போட்டிகளில் லக்னோ இரண்டாவது வெற்றியைப் பெற்று அசத்தியது. மறுபுறம் மும்பை 4 போட்டிகளில் மூன்றாவது தோல்வியைப் பெற்று பின்னடைவை சந்தித்தது.

அந்தப் போட்டியில் லக்னோ அணியின் வெற்றிக்கு 4 ஓவரில் 21 ரன்கள் மட்டும் கொடுத்து 1 விக்கெட் எடுத்து முக்கிய பங்காற்றிய திக்வேஷ் சிங் ரதி ஆட்டநாயகன் விருதை வென்றார். முன்னதாக பஞ்சாப் அணிக்கு எதிரான கடந்தப் போட்டியில் 2 விக்கெட்டுகள் எடுத்த அவர் துவக்க வீரர் பிரியான்ஸ் ஆர்யா விக்கெட்டை எடுத்தார். அவரிடம் விக்கெட்டை இழந்த ஏமாற்றத்தில் ஆர்யா பெவிலியன் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

- Advertisement -

75% அபராதம்:

அப்போது அவரை நோக்கி ஓடி வந்த திக்வேஷ் அவர் மேலே உரசிக்கொண்டு தனது கையில் ஏதோ எழுதிக்கொண்டே “வெளியே போ” என்ற வகையில் விக்கெட்டை கொண்டாடினார். அது ஐபிஎல் 2.5 விதிமுறையை மீறிய செயலாகும். அதன் காரணமாக கடந்தப் போட்டியிலேயே அவருக்கு பிசிசிஐ 25% சம்பளத்தை அபராதம் மற்றும் ஒரு கருப்புப் புள்ளியையும் தண்டனையாக வழங்கியது.

அந்த சூழ்நிலையில் இந்தப் போட்டியில் மும்பை வீரர் நமன் திர் விக்கெட்டை எடுத்த பின் மீண்டும் திக்வேஷ் அதே போல கொண்டாடினார். இருப்பினும் கடந்தப் போட்டியை போல பேட்ஸ்மேனுக்கு அருகே சென்று கொண்டாடாத அவர் தனது இடத்திலேயே கையில் ஏதோ எழுதி “வெளியே போ” என்ற வகையில் கொண்டாடினார். அதன் காரணமாக இந்தப் போட்டியிலும் திக்வேஷ் 2.5 விதிமுறையை மீறியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

- Advertisement -

இதெல்லாம் தேவையை:

முதல் போட்டியில் தண்டனை விதித்தும் அடங்காமல் மீண்டும் அதே தவறை செய்த காரணத்தால் இம்முறை அவருக்கு 50% சம்பளம் அபராதமாக விதிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அது போக ஒரு கருப்புப் புள்ளி கொடுக்கப்படுவதாகவும் பிசிசிஐ அறிவித்துள்ளது. அந்த கருப்புப் புள்ளியின் எண்ணிக்கை 5 தொடும் போது திக்வேஷ் ஒரு போட்டியில் விளையாடுவதற்கு தடை பெறுவார்.

இதையும் படிங்க: 17 பந்தில் 11.. அவர் என்ன பொல்லார்டா? பாண்டியாவுக்கும் திலக்கிற்கும் வேற நியாயமா? ஹர்பஜன், விஹாரி விளாசல்

இத்தனைக்கும் வெறும் 25 வயதாகும் திக்வேஷ் 2025 ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக 25 லட்சம் மட்டுமே சம்பளமாகப் பெறுகிறார். அதில் தற்போது 4 போட்டிகளுக்குள் அவர் 2 போட்டிகளில் 75% சம்பளத்தை அபராதமாக செலுத்த உள்ளார். இதைப் பார்க்கும் ரசிகர்கள் இதெல்லாம் தேவையா? இனிமேலாவது அடக்கமாக விளையாடுங்கள் என்று அவரை அறிவுறுத்துகின்றனர்.

Advertisement