சுனில் நரைனை பாத்து தான் இதை செய்றேன்.. அவர மாதிரி அட்டாக் செய்வேன்.. மும்பையை சாய்த்த திக்வேஷ பேட்டி

Digvesh Rathi
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 16வது போட்டியில் மும்பை அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ தங்களுடைய சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடி 203/8 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர்கள் மிட்சேல் மார்ஷ் 60, ஐடன் மார்க்ரம் 53 ரன்கள் எடுத்து அசத்திய நிலையில் மும்பைக்கு அதிகபட்சமாக கேப்டன் ஹரிதிக் பாண்டியா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அடுத்ததாக விளையாடிய மும்பை 20 ஓவரில் கடுமையாக போராடியும் 191-5 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு துவக்க வீரர்கள் வில் ஜேக்ஸ் 5, ரியான் ரிக்கல்டன் 10 ரன்கள் எடுத்து ஏமாற்றத்தைக் கொடுத்தனர். இருப்பினும் அடுத்ததாக விளையாடிய சூரியகுமார் யாதவ் – நமன் திர் 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மும்பையை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தனர்.

- Advertisement -

திக்வேஷ் அசத்தல்:

ஆனால் அப்போது அதிரடியாக விளையாடிய நமன் திரை 46 (24) ரன்களை திக்வேஷ் ரதி கிளீன் போல்டாக்கியது போட்டியில் திருப்புமுனையாக அமைந்தது. ஏனெனில் அதைப் பயன்படுத்திய லக்னோ அடுத்து வந்த திலக் வர்மாவை அதிரடியாக விளையாடாமல் மடக்கியது. மறுபுறம் அரை சதத்தை அடித்து போராடிய சூரியகுமார் முக்கியமான நேரத்தில் 67 (43) ரன்களில் அவுட்டானார்.

இறுதியில் திலக் வர்மா 25 (23) ரன்னில் ரிட்டையர்டு அவுட்டாகி சென்ற நிலையில் கேப்டன் ஹர்திக் பாண்டியா 28* (16) ரன்கள் எடுத்தப் போதிலும் ஃபினிஷிங் செய்யவில்லை. அதனால் மும்பையக்ய் 191/5 ரன்களுக்கு கட்டுப்படுத்திய லக்னோ தங்களுடைய 2வது வெற்றியை பதிவு செய்து அசத்தியது. அந்த அணியின் வெற்றிக்கு 4 ஓவரில் வெறும் 21 ரன்கள் மட்டும் கொடுத்து முக்கிய பங்காற்றிய திக்வேஷ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

நரைன் போல:

குறிப்பாக மற்ற பவுலர்கள் 10க்கும் மேற்பட்ட எக்கனாமியில் ரன்களை வழங்கிய அதே பிட்ச்சில் அவர் 5.20 என்ற எக்கனாமியில் பவுலிங் செய்து அசத்தினார். அது குறித்து திக்வேஷ் பேசியது பின்வருமாறு. “அதை மகிழ்ச்சியுடன் பவுலிங் செய்தேன். விக்கெட்டுகள் எடுக்க விரும்புவதன் அடிப்படையிலேயே எனது பவுலிங் இருக்கும். சுனில் நரைன் பவுலிங் செய்ததை நான் பார்த்தேன். அப்போதிலிருந்து தான் பௌலிங் செய்யத் துவங்கினேன்”

இதையும் படிங்க: இப்போ சொல்லுவேன் அவர் சூப்பர் பிளேயர்.. மும்பை அணியை வீழ்த்திய பின்னர் – ரிஷப் பண்ட் அளித்த பேட்டி

“சுனில் நரைன் அட்டாக் செய்து அழுத்தங்களை கையாண்டு நன்றாக பவுலிங் செய்வது போல நானும் எனது மனநிலையைக் கொண்டிருக்க விரும்புகிறேன். அவரைப்போல எனது அணியின் அழுத்தத்தை எடுக்க விரும்புகிறேன். நமன் திர் மிட்விக்கெட் திசையில் ஃபீல்டர் இல்லாததால் அடித்துக் கொண்டிருந்தார். எனவே அங்கே ஒருவரை நிறுத்தலாமா வேண்டாமா என்று ரிஷப் பண்ட்டிடம் கேட்டேன். பின்னர் அதற்கு தகுந்தாற்போல் பௌலிங் செய்து போல்ட்டாக்கினேன்” என்று கூறினார்.

Advertisement