ருதுராஜ் கெய்க்வாட்டை உதாரணமாக வைத்து ரோஹித் சர்மாவை குத்தி காட்டினாரா தோனி – விவாதத்தை கிளப்பிய பேட்டி

Dhoni
- Advertisement -

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நடப்பு 18-வது சீசனானது கடந்த மார்ச் 22-ஆம் தேதி முதல் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வழக்கம் போலவே இந்த தொடரிலும் கோப்பையை வெல்லும் இரண்டு முக்கிய அணிகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் பார்க்கப்படுகின்றன. ரசிகர்கள் மத்தியிலும் இந்த இரு அணிக்கும் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.

ரோஹித் சர்மாவை தாக்கி பேசினாரா? தல தோனி :

இந்த நடப்பு 2025 ஐபிஎல் தொடரின் மூன்றாவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டியில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய சிஎஸ்கே அணியானது மும்பை இந்தியன்ஸ் அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியினை பதிவு செய்தது.

- Advertisement -

அதே வேளையில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது இந்த தொடரின் ஆரம்பத்திலேயே தோல்வியை சந்தித்து வழக்கம் போல பின்னடைவை சந்தித்துள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் அன் கேப்டு பிளேயராக சிஎஸ்கே அணியில் ஒப்பந்தமாகி விளையாடி வரும் தோனி இந்த தொடருக்கு முன்னதாக பிரத்யேக தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த பேட்டியில் சிஎஸ்கே அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட்டை தேர்வு செய்தது ஏன்? அவர் எவ்வாறு செயல்பட வேண்டும்? என்பது குறித்த பல்வேறு கருத்துக்களை அவர் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ஒரு கேப்டனாக இருக்கும் வீரர் எந்த அளவு பேட்டிங்கில் கை கொடுக்க முடியுமோ அந்த அளவிற்கு சிறப்பாக விளையாட வேண்டும்.

- Advertisement -

ஒரு வீரராக உங்களுடைய செயல்திறன் சிறப்பாக இல்லை என்றால் என்னதான் நீங்கள் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டாலும் அது அணிக்கு பாதகமாக முடியும். ஒரு கேப்டன் தனது பேட்டிங் பார்மில் சிறந்த செயல்திறனை கொண்டிருந்தால் தான் அது அணிக்கும் சிறந்ததாக அமையும். முதலில் கேப்டனுடைய தனிப்பட்ட பார்ம் முக்கியம் அதன்பிறகு தான் கேப்டன்சி என்று பேசியுள்ளார்.

இதையும் படிங்க : நடராஜனுக்கு என்னதான் ஆச்சு? அவர் எப்போதான் டெல்லி அணிக்காக விளையாடுவார் – வெளியான தகவல்

இப்படி தோனி பேசியுள்ளது ருதுராஜ் கெய்க்வாட்டை குறிக்காமல் ரோகித் சர்மாவை குறிப்பதாக சில விவாதங்கள் சமூக வலைதளத்தில் எழுந்துள்ளன. ஏனெனில் ரோகித் சர்மா சமீப காலமாகவே மிகச்சிறப்பாக கேப்டன்சி செய்து வந்தாலும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் அவரது பேட்டிங் ஃபார்ம் மோசமாக இருந்ததது. அதனை சுட்டிக்காட்டியயேதோனி இப்படி பேசியுள்ளார் என்ற விவாதங்கள் எழுந்துள்ளன.

Advertisement