2017இல் நடந்ததை வைத்துக்கொண்டு இனியும் காலம் தள்ளமுடியாது – நட்சத்திர வீரருக்கு வலுக்கும் எதிர்ப்பு

Womens
- Advertisement -

நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக ஒரு டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. அதில் முதலில் நடந்த ஒரு டி20 போட்டியில் பரிதாப தோல்வி அடைந்த இந்தியா அதன்பின் தொடங்கிய 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது.

IND-Womens

- Advertisement -

நியூஸிலாந்தின் குவின்ஸ் டவுன் நகரில் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி துவங்கி நடைபெற்று வரும் இந்த தொடரில் முதலில் நடைபெற்ற 2 ஒருநாள் போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வியடைந்த இந்தியா 2 – 0* என ஆரம்பத்திலேயே பின்னிலை அடைந்தது. இதை அடுத்து இந்த தொடரை குறைந்தபட்சம் 3 – 2 என கைப்பற்ற வேண்டுமானால் நிச்சயம் வென்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் இன்று இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு 3வது ஒருநாள் போட்டி துவங்கியது.

ரசிகர்கள் கவலை:
இந்த முக்கியமான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவிற்கு மேக்னா 41 பந்துகளில் 67 ரன்கள் ஷபாலி வர்மா 57 பந்துகளில் 51 ரன்கள் என அரைசதம் அடித்து முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமான தொடக்கம் கொடுத்தார்கள். இருப்பினும் அடுத்து வந்த யாஷிகா பாட்டியா 19, மித்தாலி ராஜ் 23, ஹர்மன்ப்ரீட் கௌர் 13 என சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்கள்.

indianwomescricket

இறுதியில் தீப்தி சர்மா 69* ரன்கள் விளாசி நல்ல பினிஷிங் செய்த போதிலும் அவருக்கு ஆதரவாக இதர வீராங்கனைகள் ரன்கள் குவித்து தவறியதால் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா 279 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதை தொடர்ந்து 280 என்ற இலக்கை துரத்திய நியூசிலாந்து பொறுப்பாக விளையாடியதால் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக எமிலியா 67 ரன்களும், லாரன் டவுன் 64* ரன்களும் விளாசி வெற்றிக்கு வித்திட்டார்கள்.

- Advertisement -

வரும் மார்ச் மாதம் இதே நியூசிலாந்து மண்ணில் நடைபெறும் ஐசிசி மகளிர் உலககோப்பை 2022 தொடர் நடைபெறுவதால் அதற்கு பயிற்சி எடுக்கும் வண்ணமாகவே இந்த தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. ஆனால் அப்படிப்பட்ட இந்த முக்கியமான தொடரில் இந்திய மகளிர் அணி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து தொடரை இழந்துள்ளது இந்திய ரசிகர்களுக்கு பெரிய கவலையை கொடுத்துள்ளது.

harmanpreet 2

சொதப்பும் ஹர்மன்ப்ரீட் கௌர்:
இந்த முக்கியமான தொடரில் இந்தியாவின் நட்சத்திர முக்கிய வீராங்கனை மற்றும் துணை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் இதுவரை பங்கேற்ற 2 போட்டிகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இது மட்டுமல்லாமல் சமீப காலமாகவே சொதப்பி வரும் இவரை இந்திய அணியில் இருந்து நீக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக முன்னாள் இந்திய வீராங்கனை டயானா எடுல்ஜி கேட்டுக்கொண்டுள்ளார். இதுபற்றி அவர் கூறியது பின்வருமாறு. “ஜெமிமா ரோட்ரிகஸ் இந்திய மகளிர் அணியில் இருந்து நீக்கப்பட என்ன காரணத்தை பயிற்சியாளர் ரமேஷ் பவார் பயன்படுத்தினாரோ அதை ஹர்மன்ப்ரீட் கௌர் விசயத்திலும் பயன்படுத்த வேண்டும்.

- Advertisement -

எனக்கு மிகவும் பிடித்த வீராங்கனையான அவர் மீது தற்போது எனக்கு மிகப்பெரிய ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த ஒரே ஒரு இன்னிங்ஸ் (171* ரன்கள்) மட்டும் வைத்துக்கொண்டு நீண்ட நாட்கள் அணியில் நீடிக்க முடியாது. அவர் விரைவில் பழைய ஃபார்முக்கு திரும்புவார் என கருதுகிறேன். ஆனால் அதற்கான உழைப்பை அவர் போட மறுக்கிறார். ஒருவேளை சிறப்பாக விளையாடி எனது கருத்தை அவர் தவறு என நிரூபித்தால் எனக்கு மகிழ்ச்சியே. ஏனெனில் என்னைப் பொருத்தவரை இந்தியா உலக கோப்பையை வெல்ல வேண்டும்” என நியாயமான கருத்தை முன்வைத்துள்ளார்.

harmanpreet

அவர் கூறுவது போல கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த உலககோப்பையில் வலுவான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த அரையிறுதி போட்டியில் விஸ்வரூபம் எடுத்த ஹர்மன்பிரீத் கவுர் 171* ரன்கள் விளாசி தடுமாறிக் கொண்டிருந்த இந்தியாவை அபார வெற்றி பெறச்செய்து பைனலுக்கு அழைத்துச் சென்றார். அதைத் தொடர்ந்து நடந்த இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தோற்ற போதிலும் ஹர்மன்பிரீத் கௌர் விளையாடிய அந்த இன்னிங்ஸ் இந்திய ரசிகர்களின் நெஞ்சங்களில் இன்றும் நீங்காமல் இடம் பிடித்துள்ளது.

- Advertisement -

காலம் தள்ளமுடியாது:
அப்படிப்பட்ட தரமான இன்னிங்சை விளையாடிய அவர் இந்தியாவின் துணை கேப்டனாகும் அளவுக்கு உயர்ந்த போதிலும் அதன்பின் பேட்டிங்கில் பெரிய அளவில் ரன்கள் குவிக்க முடியாமல் திணறுகிறார். சொல்லப்போனால் கடந்த 2017க்கு பின் கடந்த 5 வருடங்களாக அவர் வெறும் 2 போட்டிகளில் மட்டுமே 50+ ரன்கள் எடுத்துள்ளார்.

Diana Edulji Harmanpreet Kaur

இருப்பினும் அவரின் அனுபவத்தை கருத்தில் கொண்டு இந்திய அணியில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த மகளிர் பிக் பேஷ் லீக் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்ட அவர் “தொடர் நாயகி” விருது வென்று சாதனை படைத்ததால் விரைவில் பார்முக்கு திரும்புவார் என அனைவரும் நம்பினர். ஆனாலும் கூட இதுவரை அவர் ஃபார்முக்கு திரும்பாதது ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது.

இதையும் படிங்க : பொய் சொல்லி வாய்ப்பை வாங்கிய சி.எஸ்.கே வீரர். தடைவிதிக்கப்பட வாய்ப்பு – பி.சி.சி.ஐ என்ன செய்ய போகுது?

அவரை போலவே இந்தியாவின் கேப்டனாக விளையாடி வரும் அனுபவ வீராங்கனை மிதாலி ராஜ் சமீப காலங்களாக மெதுவாக விளையாடி வருவது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனவே அவருக்கு பதில் இந்தியாவின் கேப்டனாக ஸ்மிரிதி மந்தனாவையும் ஹர்மன்ப்ரீட் கௌர்’க்கு பதில் ஸ்னே ராணாவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என முன்னாள் இந்திய வீராங்கனை டயானா எடுல்ஜி கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement