பொய் சொல்லி வாய்ப்பை வாங்கிய சி.எஸ்.கே வீரர். தடைவிதிக்கப்பட வாய்ப்பு – பி.சி.சி.ஐ என்ன செய்ய போகுது?

Hangargekar
- Advertisement -

இந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோர் உலக கோப்பையை இந்திய அணியானது யாஷ் துள் தலைமையில் கைப்பற்றி சாதனை படைத்தது. இந்த அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களுக்கு பாராட்டு குவிந்தது மட்டுமின்றி ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பும் கிடைத்தது. அதோடு அவர்களுக்கு ஏகப்பட்ட சலுகைகள் மற்றும் பரிசுத்தொகையும் அறிவிக்கப்பட்டது.

U19 World Cup 2022

- Advertisement -

அந்த வகையில் இந்த உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இருந்து பல திறமையான இளம் வீரர்கள் ஒவ்வொரு அணிக்கும் ஐபிஎல் தொடரில் விளையாட தேர்வானார்கள். அப்படி தேர்வானவர்களில் ஒருவர் தான் அண்டர் 19 அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த ராஜ்வரதன் ஹாங்கரேக்கர் என்பவர் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியில் விளையாட 1.5 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தமானார்.

ஏலத்தில் சிறிய தொகைக்கு அவர் தனது பெயரை பதிவிட்டு இருந்தாலும் மணிக்கு 140 கிலோ மீட்டருக்கு மேல் வேகமாக பந்துவீசும் அவரது திறமை கண்டு அனைத்து அணிகளும் அவர் மீது போட்டி போட்டன. இறுதியில் சிஎஸ்கே அணியானது ஒன்றரை கோடிக்கு ஏலத்தில் வாங்கியது. இந்நிலையில் தற்போது அவர் ஒரு மிகப் பெரிய சர்ச்சையில் சிக்கி விசாரணைக்கு செல்ல உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Hangargekar 1

அதன்படி மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்வரதன் ஹாங்கரேக்கர் 19 வயதுக்குட்பட்டோர் அணியில் விளையாடி கோப்பையை வெல்ல காரணமாக அமைந்து இருந்தாலும் அவருடைய உண்மையான வயது தற்போது 21 என்றும் ஆனால் அவர் பொய்யாக தனது வயதை 19 என்று குறிப்பிட்டு இந்திய அண்டர் 19 அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது. அவரது உண்மையான பிறந்த நாள் ஜனவரி 10 2001 அதன்படி அவருக்கு தற்போது 21 வயது ஆகிறது.

- Advertisement -

ஆனால் அந்த தேதியை மறைத்து அவர் நவம்பர் 10 2002 என தான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது மாற்றியுள்ளார். இப்படி வயது மாற்றியதன் காரணமாகவே அவர் 19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார் என்பது உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக அம்மாநில நிர்வாகமும், மாவட்ட கலெக்டரும் பிசிசிஐக்கு இது குறித்து விசாரிக்க ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளனர். அதில் ராஜ்வரதன் ஹாங்கரேக்கர் நவம்பர் 10 2002 என்று தனது பிறந்த தேதியை குறிப்பிட்டது பொய்யான ஒன்று என்றும் அவருடைய உண்மையான பிறந்த தேதி ஜனவரி 10 2001 என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : கங்குலியின் வார்த்தையை தவறாமல் காப்பாற்றிய ரஹானே – இலங்கை டெஸ்ட் தொடரில் இடம் உறுதி

மேலும் பள்ளி படிக்கும் போது அவர் தன்னுடைய பிறந்த தேதியினை மாற்றியுள்ளார் என்று உறுதி செய்துள்ளது. இதன்காரணமாக பிசிசிஐ அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதே அனைவரது கேள்வியாகவும் உள்ளது. அதேவேளையில் இந்த விசாரணை காலத்தில் அவர் போட்டிகளில் பங்கேற்று விளையாடலாம் என்றும் ஒருவேளை குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு தடை விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இதே போன்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு வீரர் தனது வயதை மாற்றி ஏமாற்றியதால் அவருக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement