அது என்னோட கனவு.. தோனியின் ஊரில் அந்த வாய்ப்பு கிடைக்கும்ன்னு நம்புறேன்.. துருவ் ஜுரேல் பேட்டி

Dhruv Jurel
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதி வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை தொட்டுள்ளது. அதில் இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* (5) என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. இதைத் தொடர்ந்து இத்தொடரின் 4வது போட்டி பிப்ரவரி 23ஆம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற உள்ளது.

முன்னதாக இந்த தொடரில் பேட்டிங்கில் பெரிய ரன்கள் எடுக்க தவறிய கேஎஸ் பரத் 3வது போட்டியில் நீக்கப்பட்டு இளம் வீரர் துருவ் ஜுரேலுக்கு விக்கெட் கீப்பராக விளையாடும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அந்த வாய்ப்பில் முதல் இன்னிங்சில் 46 ரன்கள் எடுத்த அவர் கேஎஸ் பரத் முதல் 2 போட்டிகளில் எடுத்த ரன்களை விட அதிக ரன்கள் எடுத்து சிறப்பாகவே செயல்பட்டார்.

- Advertisement -

தல தோனியின் ஊரில்:
எனவே இந்த தொடரின் கடைசி 2 போட்டிகளிலும் துருவ் ஜுரேல் விக்கெட் கீப்பராக விளையாடுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இந்நிலையில் இத்தொடரின் 4வது போட்டி முன்னாள் இந்திய ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெற உள்ளது. எனவே தம்முடைய ரோல் மாடலான தோனியை அந்த போட்டியின் போது சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புவதாக துருவ் ஜுரேல் கூறியுள்ளார்.

குறிப்பாக இதற்கு முன் ஐபிஎல் தொடரில் சாதாரண வீரராக பார்த்த தாம் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இந்திய வீரராக தோனியை பார்ப்பதற்கு கனவுடன் காத்திருப்பதாக துருவ் ஜுரேல் தெரிவித்துள்ளார். இது பற்றி பிசிசிஐ இணையத்தில் அவர் பேசியுள்ளது பின்வருமாறு. “ஐபிஎல் தொடரில் நான் முதல் முறையாக விளையாடிய 2021 சீசனில் தான் தோனியை சந்தித்தேன்”

- Advertisement -

“அப்போது அவருக்கு முன்பாக நின்று பார்த்த நான் “எனக்கு முன் தோனி தான் நிற்கிறாரா” என்று ஆச்சரியம் இருந்தது. நான் பார்ப்பது கனவா நிஜமா என்றும் என்ன கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். மஹி பாயை பார்ப்பது என்னுடைய கனவாகும். குறிப்பாக இந்தியாவுக்காக அறிமுகமான பின் அவரை பார்க்கக் காத்திருக்கிறேன். அவரை பார்த்து பேசிய போதெல்லாம் அவரிடமிருந்து சில புதிய அம்சங்களை கற்றுக் கொண்டேன். குறிப்பாக களத்திற்கு சென்று பந்தை பார்த்து அடி என்ற ஆலோசனையை அவர் எனக்கு கொடுத்தார்”

இதையும் படிங்க: பெயர் மாதிரியே லிட்டில் சாம்பியன்.. ஆண் குழந்தையை பெற்ற விராட் கோலியை வாழ்த்திய சச்சின்

“எனவே ராஞ்சியில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியின் போது அவரை பார்ப்பேன் என்று நம்புகிறேன்” எனக் கூறினார். இதைத் தொடர்ந்து நடைபெறும் 4வது போட்டியில் விராட் கோலி, பும்ரா, கே.எல் ராகுல் போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களுடன் களமிறங்கி இங்கிலாந்தை தோற்கடிக்கும் முனைப்புடன் இந்திய அணி தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement